தங்கத்தின் விலை ஒரே வாரத்தில் பவுனுக்கு ரூ.1,000 குறைவு: பெண்கள் குஷி

நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே போகும் தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக குறைந்து வருகிறது. கடந்த வாரம் ரூ.24,472க்கு விற்ற ஒரு பவுன் தங்கம் தற்போது ரூ.1,000 குறைந்து ரூ.23,472க்கு விற்கப்படுகிறது. தங்கத்தின் விலை இறங்குமுகமாக உள்ளபோதிலும் வெள்ளியின் விலையில் பெரிய மாற்றங்கள் இல்லை.
தங்க விலை இறங்குமுகமாக உள்ளது பெண்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இன்னும் சில நாட்களுக்கு தங்கத்தின் விலை குறைந்து கொண்டு தான் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை குறைவிற்கு சில காரணங்கள் கூறப்படுகிறது.
எண்ணெய் வளமிக்க எகிப்து, சிரியா ஆகிய நாடுகளில் உள்நாட்டுப் பிரச்சனை வெடித்துள்ளது. மேலும் பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையேயும் பிரச்சனையாக இருப்பதால் தற்போது எண்ணெய்க்கு தட்டுப்பாடாக உள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் எண்ணெய் வாங்குவதில் ஆர்வமாக இருப்பதால் தங்கத்தின் விலை குறைந்து கொண்டு போகிறது.
இது தவிர பங்கு வர்த்தக்தில் தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதாலும் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. இந்த விலை சரிவு மேலும் சில நாட்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications