2 வாட்டி கல்யாணம்.. நடத்தையில் சந்தேகம்.. 'லிவ் இன்' பெண்ணை வெட்டிக் கொன்ற மதுரைக்காரர்!
மதுரை: 2 முறை திருமணம் செய்து கணவரை விட்டுப் பிரிந்து வந்து தன்னுடன் குடும்பம் நடத்தி வந்த பெண்ணின் நடத்தை மீது சந்தேகப்பட்ட நபர் அவரை கொலை செய்து விட்டார். பின்னர் போலீஸில் சரணடைந்தார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள குட்டிமீட்டிப்பட்டி என்ற கிராமதைத் சேர்ந்தவர் 40 வயதான சுப்புலட்சுமி. இவருக்கு இரண்டு முறை திருமணமாகி இரண்டு கணவர்களுடனும் சேர்ந்து வாழாமல் தனித்து வந்து விட்டார். இருவரையும் அவர் விவாகரத்து செய்யவும் இல்லை.
இந்த நிலையில் மதுரை அவனியாபுரம் அருகே உள்ள தோடனேரியைச் சேர்ந்த 55 வயதான ராமகிருஷ்ணன் என்பவருடன் சேர்ந்து வாழத் தொடங்கினார். ராமகிருஷ்ணனும், சுப்புலட்சுமியைப் போலவே இரண்டு முறை திருமணமாகி தனித்து வாழ்ந்து வந்தவர்தானாம்.
இருவரும் திருமணம் என்று எதையும் செய்து கொள்ளாமல் சிந்தாமணி அருகே குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் சுப்புலட்சுமியின் நடத்தையில் ராமகிருஷ்ணனுக்கு சந்தேகம் வந்துள்ளது. இதுதொடர்பாக இருவருக்குள்ளும் வாக்குவாதமும் மூண்டது. இந்த நிலையில் நேற்று இரவு சுப்புலட்சுமியைக்
கத்தியால் குத்திக் கொலை செய்தார் ராமகிருஷ்ணன். பின்னர் அவனியாபுரம் காவல் நிலையம் சென்று சரணடைந்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications