தெலுங்கானா தொடர்பாக 28-ந் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்- மத்திய அரசு ஏற்பாடு!

தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் எதிர்வரும் ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கும் என்பது அப்பகுதி காங்கிரஸ் கட்சியினரின் கருத்து.
இதனாலேயே சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு விவகாரத்தால் மத்திய அரசுக்கு நெருக்கடியான சூழ்நிலை உருவானபோது காங்கிரஸ் எம்.பி.க்களே அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருந்தனர். மேலும் தாங்கள் அனைவரும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியில் இணைந்துவிடுவோம் என்றும் மிரட்டியிருந்தனர்.
இந்நிலையில் தெலுங்கானா பகுதி காங்கிரஸ் எம்.பிக்களாண மது யாக்ஷி கெளட் மற்றும் பொன்னம் பிரபாகரன் ஆகியோர் நேற்று உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவை சந்தித்துப் பேசினர். இச்சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இருவரும் தெலுங்கானா தொடர்பாக வரும் 28-ந் தேதி காலை டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியுள்ளது என்று தெரிவித்தனர்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதாக தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி அறிவித்திருக்கிறது. ஆனால் மாநில அரசு தெளிவான நிலையை அறிவிக்காததால் தெலுங்குதேசம் கட்சி இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
மத்திய அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதும் ஆந்திர மாநில கட்சிகள் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பதும்தான் தெலுங்கானா விவகாரம் முடிவுக்கு வராததற்கு காரணம் என்று மத்திய அரசு தொடர்ந்து புகார் கூறி வரும் நிலையில் மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது.. விடிவு கிடைக்குமா? எனப் பார்ப்போம்!
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications