காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டம் நாளை டெல்லியில் கூடுகிறது
Subscribe to Oneindia Tamil
டெல்லி: உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டம் நாளை மாலை டெல்லியில் கூடுகிறது.
காவிரி நதிநீர் கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் நேற்று காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டத்தை 2 நாட்களுக்குள் கூட்ட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து காவிரி கண்காணிப்புக் குழுவின் கூட்டம் நாளை மாலை 3.30 மணியளவில் டெல்லியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நாளைய கூட்டத்தில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கான நீர்தேவை குறித்து முடிவு எடுக்கப்படும். மேலும் இதன் இறுதி அறிக்கையானது வரும் திங்கள்கிழமையன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.












Click it and Unblock the Notifications