தமிழக காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடரும் போராட்டங்கள்! பல்லாயிரக்கணக்கானோர் கைது!

Subscribe to Oneindia Tamil

Bandh
திருச்சி: தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களில் காவிரி நீரைத் தராத கர்நாடகா மற்றும் காவிரி நீரைப் பெற்றுத் தராத மத்திய அரசைக் கண்டித்து முழு அடைப்பு மற்றும் மறியல் போராட்டங்கள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இப்போராட்டங்களில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், திருச்சி ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை திறந்துவிடாத கர்நாடகத்தைக் கண்டித்து முழு அடைப்புப் போராட்டமும் 12 மணி நேர தொடர் மறியல் போராட்டங்களும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்துக்கு வணிகர் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்தன.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு முழு அடைப்புப் போராட்டம் தொடங்கியது. தஞ்சாவூர், திருவாரூ, நாகை ஆகிய மாவட்டங்களில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களில் காவிரி பாசனப் பகுதிகளில் கடைகள் அடைக்கபப்ட்டிருந்தன. தனியார் பேருந்துகள் முழுவதும் இயங்கவில்லை. சில அரசுப் பேருந்துகள் மட்டுமே போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. கிராமப் புறங்களுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இம்மாவட்டங்களில் அசம்பாவிதங்களைத் தடுக்க ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.

திருவாரூரில் எர்ணாகுளம்- நாகூர் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மன்னார்குடி நல்லூரில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான ஓ.என்.ஜி.சி. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை 300க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் மன்னார்குடியில் இருந்து மயிலாடுதுறை சென்ற பயணிகள் ரயிலும் மறிக்கப்பட்டது.

தஞ்சாவூர் நகரில் இயல்பு நிலை பாதிக்கப்படவில்லை. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் தஞ்சாவூ - பட்டுக்கோட்டை சாலையில் சென்னம்பட்டி என்ற இடத்தில் மறியலில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைதாகினர்.

திருவாரூர் மாவட்டத்தில் புனல்வாசல், கீழப்பாலம், காலவாய்கரை, மேலப்பாலம் ஆகிய இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

கடலூர் மாவட்டத்தின் சிதம்பரம், சேத்தியாதோப்பு, காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

டெல்டா விவசாயிகளுக்கு ஆதரவாக சிதம் பரத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. காய்கறி மார்க்கெட்டுகள், மீன் மார்க்கெட்

முன்னதாக இன்று அதிகாலையில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் 3 இடங்களில் பேருந்துகள் கல்வீசித் தாக்கப்பட்டன. இதில் 2 அரசுப் பேருந்துகள், ஒரு தனியார் பேருந்து சேதமடைந்தன.

தொடர் போராட்டங்களால் காவிரி டெல்டா மாவட்டங்களில் பரபரப்பும் பதற்றமுமான சூழல் நிலவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+