ஜப்பானில் கடும் நிலநடுக்கம்- ரிக்டரில் 7.3!: சிறிய சுனாமி அலைகளே உருவாயின!

ஜப்பான் நாட்டு நேரப்படி மாலை 5.18 மணியளவில் ஹோன்சு அருகே சென்டாய் பகுதியை ஒட்டிய சன்ரிகு ஒகி என்ற இடத்தை மையமாக வைத்து இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட பல பகுதிகளிலும் இந்த மிகக் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது. நில நடுக்கம் உணரப்பட்ட போது அலுவலகங்கள், வீடுகளில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.
இதைத் தொடர்ந்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மியாகி அருகே 1 மீட்டர் உயரத்துக்கு கடல் அலைகள் எழும்பின. ஆனால், இவாடா பகுதியில் 20 செ.மீ. அளவுக்கே சுனாமி அலைகள் எழுந்தன. கடந்த 2011-ம் ஆண்டு நிலநடுக்கத்தின்போது பெரும் சுனாமி பேரலைகள் தாக்கிய பகுதிகள் இவை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்டாய் பகுதியில் கடந்த ஓராண்டில் 9-வது முறையாக இது போன்ற நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. தற்போதைய நிலநடுக்கத்தால் கடந்த 2011-ம் ஆண்டைப் போல பெரும் சுனாமி பேரலைகளை உருவாக வாய்ப்பில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
0.5 மீட்டர் முதல் அதிகபட்சமாக 2 மீட்டர் வரையிலான உயரத்துக்கே அலைகள் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் ஜப்பானின் பல்வேறு பகுதிகளுக்கு விட்டுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுவிட்டது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications