பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத 1000 பள்ளிகளுக்கு அரசு நோட்டீஸ்
சென்னை: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத 1000 பள்ளிகளுக்கு அரசு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
தமிழகத்தில் மொத்தம் 15 ஆயிரம் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. சுமார் 2.5 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
கடந்த 2004-ம் ஆண்டு கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் கருகி உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து தமிழக அரசு குழுக்கள் அமைத்து பள்ளிகளுக்கான பாதுகாப்பு விதிமுறைகள் வரையறுக்கப்பட்டன. இதன்படி ஒவ்வொரு பள்ளிக்கும் சொந்த நிலம், போதுமான ஆசிரியர்கள், தீத்தடுப்பு சாதனங்கள் போன்றவை இருக்க வேண்டும். இவற்றை பின்பற்றாத 1000 பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் கொடுக்காமல் கல்வித்துறை நிறுத்தி வைத்திருக்கிறது. இதனால் இந்தப் பள்ளிகளில் படிக்கும் சுமார் 4 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுவது கேள்விக்குறியாகியிருக்கிறது.
அரசின் இந்நடவடிக்கைக்கு தனியார் பள்ளிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. ஆனால் அரசுத் தரப்போ பள்ளிகளின் பாதுகாப்பு விதிகளில் எந்த சமரசமும் இல்லை என்று அறிவித்திருக்கிறது. அரசு விதிகளை பின்பற்றி 2013-ஜூன் மாதத்திற்குள் அனைத்து தனியார் பள்ளிகளும் தொடர் அங்கீகாரம் பெற வேண்டும் என்பதில் அரசுத் தரப்பு உறுதியாக இருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications