தமிழகத்துக்கு 12 டி.எம்.சி. நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி: காவிரி கண்காணிப்புக் குழுவின் உத்தரவுப் படி தமிழகத்துக்கு டிசம்பர் மாதத்துக்குள் 12 டி.எம்.சி. நீரைத் திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டிருக்கிறது.

தமிழகத்துக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீரைத் திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த புதன்கிழமை உத்தரவிட்டது. இதை முதலில் ஏற்க மறுத்த கர்நாடகா, ஒரு நாள் தாமதமாக தமிழகத்துக்கு நீரைத் திறந்துவிட்டது. மேலும் காவிரி கண்காணிப்புக் குழுவைக் கூட்ட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி டெல்லியில் கூடிய காவிரி கண்காணிப்புக் குழு, தமிழகத்துக்கு டிசம்பர் மாத இறுதிக்குள் 12 டி.எம்.சி. நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் கண்காணிப்புக் குழுவின் உத்தரவை ஏற்க முடியாது என்று கர்நாடகா கூறி வருகிறது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் காவிரி நதிநீர் வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது காவிரி கண்காணிப்புக் குழுவின் உத்தரவுப்படியான 12 டி.எம்.சி. நீர் போதுமானது அல்ல என்று தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. ஆனால் கண்காணிப்புக் குழு உத்தரவுப் படி 12 டி.எம்.சி. நீரை இந்த டிசம்பர் மாதத்துக்குள் திறந்துவிட வேண்டும் என்று கூறிய உச்சநீதிமன்றம், இதில் ஆட்சேபனை இருந்தால் மீண்டும் காவிரி நதிநீர் ஆணையத்திடம் தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளது.
இந்த உத்தரவை கர்நாடகா நிறைவேற்றுமா?
-
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications