எப்.டி.ஐ. வாக்கெடுப்பில் வெற்றி பெற அரசு "ஏதோ" செய்திருக்கிறது..: சீதாராம் யெச்சூரி
டெல்லி: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிரான தீர்மானத்தில் வெற்றி பெறுவதற்காக மத்திய அரசு "ஏதோ" செய்து கட்சிகளின் வாக்குகளைப் பெற்றிருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாரம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார்.
தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் சீதாராம் யெச்சூரி தெரிவித்த கருத்துகள்:
ராஜ்யசபாவில் திமுக, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் தங்களுக்கு தாங்களே விசுவாசமாக இல்லை. அப்படி அந்த கட்சிகள் நடந்திருந்தால் மத்திய அரசு தோற்றுப் போயிருக்கும்.
இந்த கட்சிகளை மிரட்டியோ அல்லது அச்சுறுத்தியோ அல்லது லஞ்சம் போன்று ஏதோ ஒன்றை பயன்படுத்திதான் இந்த கட்சிகளின் வாக்குகளைப் பெற்றிருக்கிறது மத்திய அரசு.
நிச்சயமாக சொல்லுகிறோம் ஏதோ ஒன்று நடந்திருக்கிறது... அப்படி எதுவும் நடந்திருக்காது என்று சொல்லவே முடியாது.
1993-ல் நரசிம்மராவ் அரசு நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் வெற்றி பெற்றதற்காக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது. பின்னர் 2008-ம் ஆண்டு மன்மோகன்சிங் அரசுக்கு இடதுசாரி கட்சிகள் ஆதரவை திரும்பப் பெற்ற நிலையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதற்கும் லஞ்சம் கொடுக்கப்பட்டது.
அன்னிய செலாவணி முறைப்படுத்தும் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை ரத்துச் செய்யக் கோரி இடதுசாரி கட்சிகள் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவருகிறோம். அப்போதாவது பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்.
மத்திய அரசு தனது மெஜாரிட்டியை மீண்டும் உருவாக்கவும், தக்கவைக்கவும் பாடுபட வேண்டி இருக்கும்.சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள், தங்கள் நற்பெயரை உணர்ந்து, நாங்கள் கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications