ஹோட்டலில் ஓசி பிரியாணி கேட்டு குடிபோதையில் ரகளை: 2 போலீசார் சஸ்பெண்ட்
திருவண்ணாமலை: பாபர் மசூதி இடிப்பு தினத்தன்று வந்தவாசியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை போலீசார் பிரியாணி கடையில் குடிபோதையில் ரகளை செய்தனர். இதையடுத்து ரகளை செய்த 2 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பாபர் மசூதி இடிப்பு நாளான டிசம்பர் 6ம் தேதி இந்தியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில் திருவண்ணாமலை ஆயுதப்படையைச் சேர்ந்த 16 போலீசார் வந்தவாசியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அன்று மாலை 4 மணிக்கு அவர்கள் வந்தவாசி தாலுகா அலுவலகம் அருகில் உள்ள பிரியாணி கடையில் சாப்பிடச் சென்றனர்.
சாப்பிடச் சென்ற இடத்தில் அவர்கள் குடிபோதையில் கடைக்காரருடன் தகராறு செய்துள்ளனர். மேலும் இதை தட்டிக்கேட்ட பொதுமக்களையும் மிரட்டியுள்ளனர். பணியில் இருக்கையில் மப்பில் ஓசி பிரியாணிக்காக போலீசார் தகராறு செய்ததைப் பார்த்து பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த வந்தவாசி போலீசார் பிரியாணி கடைக்கு விரைந்து வந்து ஆயுதப்படை போலீசாரை அழைத்துச் சென்றனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணையின் முடிவில் ரகளையில் ஈடுபட்ட ஆயுதப்படை ஏட்டு முத்துலிங்கம், கான்ஸ்டபிள் வீரகுமார் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications