புதிய பொலிவுடன் எம்.ஜி.ஆர். நினைவிடம்: ஜெயலலிதா திறந்து வைத்தார்

அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் நினைவிடம் மெரினா கடற்கரையில் 8.25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் நுழைவு வாயில் முகப்பையும், முன்பக்கச் சுற்றுச்சுவரை புதுப்பிக்கவும் ரூ.8 கோடியே 90 லட்சம் கடந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து எம்.ஜி.ஆர். நினைவிடத்தின் முகப்பு வாயில் புதுப்பொலிவுடன் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
பறக்கும் குதிரை இரட்டை இலை
60 அடி உயரத்தில் பிரமாண்டமான 4 தூண்கள் எழுப்பப்பட்டு அவற்றுக்கு நடுவில் பளிங்கு கல் மேடையில் இரட்டை இலை சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு கால்களை தூக்கியபடி கம்பீரமாக நிற்கும் வெண்கலத்தாலான பறக்கும் குதிரை சிலை அமைக்கப்பட்டு இருக்கிறது.
சமாதியினை சுற்றிலும், கிதார் வடிவில் புதிய நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் 18 மீட்டர் விட்டம் கொண்ட இரண்டு பர்கோலாஸ் இருக்கை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக இரண்டு சாய்வு நடைபாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன.இதுதவிர, நினைவிடத்தின் இரண்டு பக்கங்களின் ஓரங்களிலுள்ள நடைபாதைகள் கான்கீரிட் ஓடுகளாலும், பேவர் பிளாக்குகளாலும் அமைக்கப்பட்டு இருக்கின்றன. மத்தியில் அமைந்துள்ள புல்வெளியின் நடுவில் செயற்கை நீரூற்று ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.
நினைவிடம் புதுப்பிக்கும் பணி முடிவடைந்ததை ஒட்டி ஞாயிறன்று பிற்பகல் எம்.ஜி.ஆர் நினைவிடத்தை பொதுமக்கள் பார்வைக்காக முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார். அதன்பிறகு, எம்.ஜி.ஆர். சமாதிக்கு சென்று மலர் வளையம் வைத்து வணங்கினார்.அங்கு தயாராக நிறுத்தப்பட்டு இருந்த பேட்டரி காரில் அமர்ந்து, புதிதாக அமைக்கப்பட்டுள்ள புல்வெளிகளையும், செயற்கை நீர்வீழ்ச்சிக்களையும், பார்வையிட்டார்.
இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில், தமிழக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications