மாணவன் செய்த தவறுக்காக பெற்றோரைத் தண்டித்த தலைமை ஆசிரியர்!
சேலம்: மாணவன் செய்த தவறுக்காக அவனது பெற்றோரை தினசரி பள்ளிக்கு வரவழைத்து விசாரணை என்ற பெயரில் வெறுமனே உட்கார வைத்து அனுப்பி சித்திரவதை செய்ததாக பள்ளித் தலைமை ஆசிரியர் மீது புகார் எழுந்துள்ளது.
சேலம் சூரமங்கலம் பகுதியில் ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அதில் ஜூல்பிகர் அலி என்ற மாணவன் 8ம் வகுப்பு படித்து வருகிறான். ஒரு வாரத்துக்கு முன்பு பள்ளியிலிருந்து பள்ளிக்குச் சொந்தமான பந்தை அலி எடுத்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தலைமை ஆசிரியரிடம் புகார் போனது. அவர் அலியைக் கூப்பிட்டு விசாரித்தார்.
இதையடுத்து அலியின் தாய், தந்தையை விசாரணைக்காக அடுத்த நாள் காலை அழைத்துள்ளார் தலைமை ஆசிரியர்.அவர்களும் வந்தனர். ஆனால் விசாரணை எதுவும் இல்லாமல் மாலை வரை உட்கார வைத்து அனுப்பி விட்டார் தலைமை ஆசிரியர். இதேபோல தினசரி செய்துள்ளாராம். அதாவது மாணவனைத் தண்டிப்பதற்குப் பதில் அவனுடைய பெற்றோரை இப்படி நூதனமாக தண்டித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ஈஸ்வரனுக்குப் புகார்கள் போனது. இதையடுத்து கல்வி அலுவலர் கலீல் முகம்மது பள்ளிக்கு வந்து நேரில் விசாரணை நடத்தினார். விசாரணையின்போது மாணவனின் பெற்றோரை தான் தணடிக்கவில்லை என்றும் விசாரணைக்காக அழைத்ததாகவும் கூறியுள்ளார் தலைமை ஆசிரியர். மேலும் தலைமை ஆசிரியர் தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்ததாகவும் தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications