தடை விலகியது: தலையணை, நம்பிகோயிலில் குவியும் சுற்றுலாப் பயணிகள்
நெல்லை: களக்காடு புலிகள் காப்பகத்தில் உள்ள தலையணை மற்றும் நம்பிகோயில் ஆறுகளுக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

புலிகள் காப்பகங்களுக்கு செல்ல தடை
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் உள்பட பல்வேறு புலிகள் காப்பகங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்தது. இதனையடுத்து காப்பக பகுதியில் உள்ள தலையணை மற்றும் நம்பி கோயில் பகுதிகளுக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. ஆனால் ஒவ்வொரு கடைசி சனிக்கிழமை தோறும் நம்பி கோயிலுக்கு மட்டும் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

தடை விலகியது
புலிகள் காப்பகங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல சுப்ரீம் கோர்ட் சில கட்டுப்பாடுகளை விதித்து அனுமதி வழங்கியது. ஆனால் சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கிய பின்னரும் சுற்றுலாப் பயணிகள் செல்ல களக்காடு வனத்துறையினர் அனுமதிக்கவில்லை.

சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க முடிவு
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் உள்பட பல்வேறு புலிகள் காப்பகங்களுக்கு சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் முண்டந்துறையில் நடந்தது. கூட்டத்தில் களக்காடு வனப்பகுதியில் உள்ள நம்பிகோயில் மற்றும் தலையணை பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி அளிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.

குவியும் சுற்றுலாப் பயணிகள்
களக்காடு புலிகள் காப்பகத்தில் உள்ள பகுதிகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தற்போது தினமும் இளசுகள் பாட்டில் சகிதமாய் அங்கு படை எடுத்து வருகின்றனர். தொடர்ந்து வனத்துறை சோதனை போட்டாலும் விடுமுறை நாட்களில் அளவுக்கு அதிகமான கூட்டம் வந்து குவிந்து விடுவதால் மது பாட்டில்கள் பிடிபடுவதும், உடைபடுவதும் அரங்கேறி வருகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications