முலாயம்சிங்குக்கு கடும் நெருக்கடி- சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை தொடரும்: சுப்ரீம் கோர்ட்

முலாயம்சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சொத்துக் குவிப்பு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் விஸ்வநாத் சதுர்வேதி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 2007-ம் ஆண்டு மார்ச் 1-ந் தேதியன்று சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக முலாயம்சிங் யாதவ் குடும்பத்தினர் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த ஆண்டு பிப்ரவரி 17-ந் தேதியன்று தீர்ப்பை ஒத்தி வைத்தது.
இன்று இந்த வழக்கு தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் மற்றும் நீதிபதி டாட்டு ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது முலாயம்சிங் யாதவ் மற்றும் அவரது மகன்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சிபிஐ விசாரணை தொடரும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இருப்பினும் முலாயம்சிங் யாதவின் மருமகளான டிம்பிள் மீதான வழக்கை ரத்து செய்திருக்கிறது.
மேலும், இந்த வழக்கின் விசாரணை நிலவரத்தை சிபிஐ உச்சநீதிமன்றத்தில்தான் தாக்கல் செய்ய வேண்டும். சிபிஐ என்பது சுதந்திரமான ஒரு அமைப்பு. அது சட்டப்படி தமது விசாரணையை தொடரலாம் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications