உல்லாசத்திற்கு மறுத்த தம்பி மனைவி... கொக்கு சுடும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வாலிபர்!

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரம் அருகே தம்பி மனைவியை உல்லாசமாக இருக்க அழைத்தார் ஒரு வாலிபர். அதற்கு அவர் மறுக்கவே கொக்கு சுடும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு போலீஸில் சரணடைந்தார்.

சேஷசமுத்திரம் என்ற ஊரைச் சேர்ந்தவர் 30 வயது பிரகாஷ். இவரது மனைவி செல்வி. 25 வயது. இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.

டிசம்பர் 11ம் தேதி பெரம்பலூர் போயிருந்தார் பிரகாஷ். குழந்தைகள் பள்ளிக்குப் போய் விட்டன. வீட்டில் செல்வி மட்டும் தனியாக இருந்துள்ள்ளார். தங்களது வயலில் பூச்செடி நட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு துப்பாக்கிச் சத்தம் கேட்டது. அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது செல்வி சுருண்டு விழுந்து இறந்து கிடந்தார். கையில் பிரகாஷின் அண்ணன் பாக்கியராஜ் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தார்.

கிராமத்தினர் என்ன ஏது என்று கேட்டபோது கொக்கு சுட்டேன். அப்போது செல்வி குறுக்கே வந்து விட்டார். குண்டு பாய்ந்து விட்டது என்று கூறினார். பின்னர் போலீஸிலும் சரணடைந்தார். போலீஸார் நடத்திய விசாரணையில் வேறு சில தகவல்களைக் கூறினார் பாக்கியராஜ்.

அவர் கூறுகையில், நான் எனது பெற்றோர் மற்றும் தம்பியுடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறேன். எனது மனைவி பிரசவத்திற்காக தாய் வீடு போயுள்ளார். எனது தம்பி மனைவி செல்வி மீது எனக்கு ஒரு கண். சில நாட்களுக்கு முன்பு நான் அவரிடம் தவறாக நடக்க முயன்றேன். அதை அவர் எனது தாயாரிடம் கூறவே தாயார் என்னைக் கண்டித்தார். இதனால் எனக்கு அவமானமாகப் போய் விட்டது.

இந்த நிலையில், கொக்கு வேட்டைக்காக வயலுக்குப் போயிருந்தேன். அப்போது அங்கு செல்வி தனியாக பூச்செடி நட்டுக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த நான் அவரை உல்லாசத்திற்கு அழைத்தேன். ஆனால் அவர் வர மறுத்தார். மேலும் எனது தம்பியிடம் சொல்லப் போவதாகவும் கூறினார். இதனால் கோபத்தில் நான் கொக்கு சுடும் துப்பாக்கியை எடுத்து சுட்டு விட்டேன் என்றார் பாக்கியராஜ்.

போலீஸார் அந்தத் துப்பாக்கியைக் கைப்பற்றினர். அது ஒருநாட்டுத் துப்பாக்கியாகும். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+