இத்தாலியைக் கலக்கிய பெர்லஸ்கோனியின் 'காதல் படை'!
ரோம்: இத்தாலி முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லஸ்கோனியின் தீராத காதல் தாகம் எப்போது முடியும் என்று தெரியவில்லை. லேட்டஸ்டாக தனது 76 வயதில் 26 வயதுப் பெண்ணுடன் அவர் ஜோடி போட்டிருப்பது இத்தாலியர்களை வியர்கக வைத்துள்ளது.
பெர்லஸ்கோனியுடன் தொடர்புடைய பெண்களைப் பட்டியலிட்டால் பல மல்டி பேஜ் ஸ்டோரீஸ் போட்டாக வேண்டும். அவ்வளவு பெரிய பட்டியல் அது. அவருடன் எத்தகைய தொடர்பு வைத்திருந்தார்கள் என்பதே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஏகப்பட்ட தொடர்புகளை பல பெண்கள் வைத்திருந்தனர்.
மாடல் அழகிகள், விளையாட்டுத்துறையினர், விபச்சாரப் பெண்கள், அரசியல் கட்சியினர் என சகல துறைப் பெண்களும் இந்த காதல் மன்னனிடம் வீழ்துள்ளனர். அதுகுறித்த ஒரு பார்வை...

பெர்லஸ்கோனி பணத்தில் செருப்பு வாங்கிக் குவித்த பார்பரா
32 வயதான பார்பரா குர்ரா என்ற மாடல் அழகி பெர்லஸ்கோனியுடன் தொடர்பு வைத்திருந்தவர்களில் ஒருவர். பெர்லஸ்கோனியுடன் சேர்ந்த ஒரே வாரத்தில் இவரிடம் எது சேர்ந்ததோ இல்லையோ ஏகப்பட்ட செருப்புகள் சேர்ந்து விட்டனவாம். அதாவது ஒரே நாளில் 25 ஜோடி செருப்புகளை வாங்கிக் குவித்தாராம் பார்பரா. அத்தனையும் பெர்லஸ்கோனி கொடுத்த பணத்தில்தான்.

ரொனால்டோவின் காதலியையும் விடாத பெர்லஸ்கோனி
பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் காதலியாக இருந்தவர் ரெபல்லா பிகோ. இவரையும் பெர்லஸ்கோனி தனது காதல் லீலைப் பட்டியலில் சேர்த்து சந்தோஷமாக இருந்துள்ளார். ரெபல்லா, இத்தாலி நாட்டு பிக் பிரதர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலக்கியவர் ஆவார்.

லட்டுப் பெண் மிரியம் லொட்டோ
நடிகையான மிரியம் லொட்டோவும், பெர்லஸ்கோனியின் காதல் பெண்தான். அதற்குப் பிரதியுபகாரமாக பெர்லஸ்கோனியிடமிருந்து நிறையப் பணம் பெற்றுள்ளாராம் லொட்டோ.

பிரேஸ்லெட் வாங்கிக் குவித்த பிரான்ஸெஸ்கா
இன்னொரு மாடல் அழகியான பிரான்ஸெஸ்கா சிப்ரியானி, பெர்லஸ்கோனியின் அன்புக்குப் பாத்திரமானவர். அவர் மீது கொண்ட பிரியத்தால், நிறைய வைரம் மற்றும் தங்கத்திலான பிரேஸ்லெட்களை பிரான்செஸ்காவுக்குப் பரிசாகக் கொடுத்துள்ளாராம் பெர்லஸ்கோனி.

வீடு கொடுத்து தங்க வைத்து விளையாடிய விசான்
23 வயதேயானா அயோனா விசானின் கதையே வித்தியாசானது. இவர் ஒரு மாடல் அழகி. இவரை விரும்பிய பெர்லஸ்கோனி இவரை மில்ன் நகருக்குக் கூட்டி வந்து அங்கு ஒரு வீட்டில் தங்க வைத்தார். அது அவரது வீடுதான். வாடகை எதுவும் கிடையாது. மாறாக விரும்பியபோதெல்லாம் விசான், பெர்லஸ்கோனியிடம் வந்து சந்தோஷப்படுத்தி விட்டுப் போவாராம்.

பிளேபாயும், பிளேபாயும்...
பிளேபாய் பெர்லஸ்கோனியிடம் வந்து சேர்ந்தவர்களில் ஒருவர்தான் பார்பரா பக்கியோலி. 24 வயதான இவர் பிளேபாய் பத்திரிகைக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்தவர் ஆவார். என்ன காமெடிக் கொடுமை என்றால், பார்பராவின் தந்தையே, பெர்லஸ்கோனியிடம் தனது மகளை அனுப்பி வைத்தாராம். பெர்லஸ்கோனியிடம் நிறையப் பெண்கள் உள்ளனர். ஆனால் அவர்களை பின்னுக்குத் தள்ளி விட்டு நீ முன்னுக்கு வா என்று மகளிடம் அறிவுரையும் கூறியவராம் பார்பராவின் தந்தை...

பல்லைப் பார்க்க வந்த டாக்டரையும் விடலை...
மிலன் நகரில் ஒருமுறை பெர்லஸ்கோனியை சிலர் தாக்கி விட்டனர். இதனால் அவரது வாயில் அடிபட்டது. இதையடுத்து நிக்கோல் மினெட்டி என்ற பெண் டாக்டரை வரவைத்து சிகிச்சை கொடுக்கச் செய்தனர். வந்த டாக்டர் மீது மோகம் கொண்ட பெர்லஸ்கோனி அப்படியே தன்னுடன் சேர்த்து்க கொண்டு விட்டார்.

வெனிசூலாவின் 'வெது வெது' அழகி எஸ்பிகா...
29 வயதான வெனிசூலா நாட்டு மாடல் அழகி அய்டா எஸ்பிகாவும், பெர்லஸ்கோனியின் காதலியர் படையில் ஒருவர். நான்கு வருடப் பழக்கம் இருவருக்கும். எல்லோரிடமும் இனிக்க இனிக்கப் பேசுகிறார் பெர்லஸ்கோனி என்று அவர் புகழ் பாடியவர் எஸ்பிகா. ஆனால் கூடவே, அவர் எனக்கு அப்பா மாதிரி என்று அவர் சொன்னபோதுதான் எல்லோரும் எழுந்து நின்று சிரித்து அமர்ந்தனர்.
இவர்கள் எல்லாம் பெர்லஸ்கோனியின் காதல் பாக்கெட்டில் இடம் பெற்றிருந்த சிலர்தான்... இந்தப் பட்டியலுக்கு முடிவே இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில்தான் பெர்லஸ்கோனியின் தொடர் தொடர்புகள் இருந்து வருகின்றன.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications