டீன் ஏஜ் பையனை மயக்கி உறவு கொண்ட 38 வயதுப் பெண்ணுக்கு 6 மாத சிறை...!

Subscribe to Oneindia Tamil

Marie Friendship
பிரிஸ்டல், இங்கிலாந்து: டீன் ஏஜ் பையனை மயக்கி அவரை காம வலையில் வீழ்த்தி உறவும் வைத்துக் கொண்ட38 வயதுப் பெண்ணுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும் அந்தத் தண்டனையை கோர்ட் 2 வருடத்திற்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

அந்தப் பெண்ணின் பெயர் மேரி ஜீன் பிரண்ட்ஷிப். பிரிஸ்டலைச் சேர்ந்தவர். திருமணமானவர். இந்த நிலையில் இவர் டீன் ஏஜ் வயதுப் பையன் ஒருவன் மீது ஆசை கொண்டார். காதல் மலர்ந்தது. அந்தப் பையனும் இப்பெண்ணுடன் நெருக்கமாகப் பழகத் தொடங்கினான். இது 6 மாதமாக நீடித்தது. இதில் உறவு வரை இருவரும் போய் வந்தனர்.

ஏற்கனவே கடந்த 18 வருடமாக தனது கணவருடன் வாழ்க்கை நடத்தி வரும் மேரி, கூடவே இந்த 16 வயது சிறுவனுடனும் சைடில் உறவு கொண்டு வந்துள்ளார். இதை தனது தோழியர் சிலரிடம் பெருமையாகவும் கூறியுள்ளார். அவர்கள் மூலமாக காவல்துறை வரை விஷயம் போனது. இதையடுத்து மிகவும் குறைந்த வயது கொண்ட மைனர் பையனை மயக்கி தவறான உறவுக்குப் பயன்படுத்தியதாக இவர் மீது வழக்குத் தொடர்ந்தது போலீஸ். இதில் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த பிரிஸ்டல் கோர்ட், மேரிக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்தது. ஆனால் அவரது தரப்பு வழக்கறிஞர், மேரிக்கும், சிறுவனுக்கும் இடையே தவறான உறவு இருப்பதாக கூறப்படுவது தவறு. உண்மையில் அந்தப் பையனுக்கு வயது 16க்கு மேல் ஆகிறது. எனவே இந்த உறவில் தவறு இருப்பதாக கூற முடியாது. இதுகுறித்து மேலும் சட்ட ஆலோசனை மேற்கொண்டுள்ளோம். எனவே தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரினார். இதையடுத்து தண்டனையை 2 வருடத்திற்கு நிறுத்தி வைத்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+