26/11 தாக்குதல்: ஹபீஸ் சயீதை கைதே செய்யாமல் இந்தியாவிடம் புழுகிய பாகிஸ்தான்

26/11 மும்பை தாக்குதலுக்கு முக்கிய மூளையாக இருந்த லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சயீதை பாகிஸ்தான் கைது செய்யாமல் இருந்துள்ளது. பாகிஸ்தானில் அவர் மீது இருந்த பழைய வழக்குகளில் கைது செய்தது. ஆனால் நீதிமன்றம் அவர் குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்தது. இந்நிலையில் மும்பை தாக்குதல் குறித்து சயீதை கைது செய்ததாக பாகிஸ்தான் இந்தியாவுக்கு தவறான தகவலை அளித்துள்ளது.
கடந்த வாரம் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் இந்தியா வந்திருந்தபோது பகிர்ந்து கொண்ட ஆவணங்களின் மூலம் தான் இது தெரிய வந்துள்ளது. மேலும் மும்பை தாக்குதல் தொடர்பாக சயீதுக்கு எதிராக ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று பாகிஸ்தான் பொய் சொன்னதும் அந்த ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் அந்த ஆவணங்களை மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே இன்று ராஜ்யசபாவில் காண்பித்து பாகிஸ்தானின் குட்டை உடைத்தார். மாலிக்கிற்கு சயீத் விவகாரத்தில் தவறான தகவல்களை அளித்துள்ளனர் என்றார் ஷிண்டே. ஏதோ பழைய வழக்குகளில் சயீதை பாகிஸ்தான் கைது செய்தது தெரிந்து இந்தியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து ஷிண்டே இன்று ராஜ்யசபாவில் கூறுகையில்,
சயீத் கைது செய்யப்பட்ட 3 வழக்குகளின் முதல் தகவல் அறிக்கைகள் மற்றும் நீதிமன்ற தீர்ப்புகளின் நகல்களை இந்தியாவிடம் அளிக்கத் தயார் என்று மாலிக் என்னிடம் தெரிவி்த்தார்.
மும்பை தாக்குதலுக்காக அல்லாமல் வேறு வழக்குகளுக்காக சயீத் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் மும்பை தாக்குதல் வழக்கில் சயீதை 3 முறை கைது செய்ததாகவும் போதிய ஆதாரம் இல்லாததால் நீதிமன்றம் விடுவித்ததாகவும் பாகிஸ்தான் அமைச்சர் ரஹ்மான் மாலிக் தெரிவித்திருந்தார் என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications