மீண்டும் ஃபேஸ்புக்கிற்கு வந்தார் கமெண்ட் போட்டு கைதான ஷாஹீன்
மும்பை: சிவ சேனா தலைவர் பால் தாக்கரேவைப் பற்றி ஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்டு கைதான ஷாஹீன் தற்போது மீண்டும் ஃபேஸ்புக்கிற்கு வந்துள்ளார்.
சிவ சேனா தலைவர் பால் தாக்கரேவைப் பற்றி ஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்டு கைதானவர் பால்கரைச் சேர்ந்த ஷாஹீன்(21). இந்த சம்பவத்திற்கு பிறகு ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறிய அவர் தனது செல்போன் நம்பரைக் கூட டிஆக்டிவேட் செய்துவிட்டார். ஒரு மாத காலமாக வீட்டுக்குள்ளேயே அடைபட்டுள்ளார்.
இந்நிலையில் ஷாஹீன் கடந்த சனிக்கிழமை மீண்டும் ஃபேஸ்புக்கிற்கு வந்துள்ளார். அன்று காலை 8 மணிக்கு தனது முகம் தெளிவாகத் தெரியும் புகைப்படத்தை அப்லோட் செய்துள்ளார். மேலும் தனது செல்போன் நம்பரையும் ஆக்டிவேட் செய்துள்ளார். இது தவிர பால்கரைச் சுற்ற தனது 2 சக்கர வாகனத்தையும் தூசி தட்டி வைத்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஐ ஆம் பேக். பால்கரின் தெருக்களில் சுற்ற ஆசையாக உள்ளது. பயமின்றி வெளியே செல்ல விரும்புகிறேன் என்றார்.
அவர் மீண்டும் ஃபேஸ்புக்கிற்கு வந்ததை பலரும் வரவேற்றுள்ளனர். மேலும் ஷாஹீனும், அவர் போட்ட கமெண்ட்டிற்கு லைக் கொடுத்து கைதான ரேணுவும் வரும் 21, 22 ஆகிய தேதிகள் அகமதாபாத்தில் உள்ள ஐஐடி மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications