குவாரியில் மோதல்: கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. உட்பட 32 பேர் மீது வழக்குப் பதிவு
தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் அருகே ஒரு கல் குவாரியில் ஏற்பட்ட மோதலில் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. உள்ளிட்ட 32 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி அருகே உள்ளது ஓட்டப்பிடாரம். இந்த தொகுதிக்குட்பட்ட பகுதியில் வெள்ளாரம் என்ற கிராமத்தில் கல்குவாரி ஒன்றை முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. மோகனின் உறவினர் வீரபெருமாள் என்பவர் அரசு அனுமதியுடன் நடத்தி வருகிறார்.
இங்கு முறைகேடுகள் நடப்பதாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவரும், ஓட்டப்பிடாரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் கிருஷ்ணசாமி தனது ஆதரவாளர்கள் 7 பேருடன் கல்குவாரியை ஆய்வு செய்ய சென்றார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வீரபெருமாள் முன்னாள் எம்.எல்.ஏ. மோகனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த மோகன் டாக்டர் கிருஷ்ணசாமியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் இரு தரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் உருட்டுக்கட்டையால் தாக்கிக் கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு தரப்பினரையும் சமரசம் செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரனை நடத்தினர்.
இதில், வீரபெருமாள் கொடுத்த புகாரின்பேரில் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ., அவரது ஆதரவாளர் பட்டவராயன், கண்ணப்பன், சுப்ரமணியன் உட்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். அதே போல, கிருஷ்ணசாமி தரப்பைச் சேர்ந்த பட்டவராயன் கொடுத்த புகாரின் பேரில் முன்னாள் எம்.எல்.ஏ. மோகன், வீரபெருமாள் உட்பட 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் மேலும் கலவரம் வெடிக்குமோ என பொது மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications