தேனியில் போய் நிவாரணம் தேடுங்கள்.. விஜயகாந்த்துக்கு ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: தேனி செசன்ஸ் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி விஜயகாந்த் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தேனி மாவட்டத்தில் கடந்த மாதம் நடைபெற்ற தேமுதிக பொது கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பேசினார். அப்போது தமிழகம் ஊழலில் முன்னணியில் இருப்பதாக கூறினார். இதனைத் தொடர்ந்து உண்மைக்குப் புறம்பாக தகவல்களை வெளியிட்டதாக விஜயகாந்த் மீது அவதூறு வழக்கை தமிழக அரசு தாக்கல் செய்தது.
இந்த வழக்கை தேனி செஷன்ஸ் கோர்ட் விசாரித்து, டிசம்பர் 19ம் தேதி கோர்ட்டில் ஆஜராகுமாறு விஜயகாந்த்துக்கு சம்மன் அனுப்பியது. இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்ய கோரி விஜயகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பால்வசந்தகுமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் இது தொடர்பாக தேனி கோர்ட்டில் நிவாரணம் தேடிக் கொள்ளுங்கள் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே புதுக்கோட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என விஜயகாந்த் தனியாக ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பால்வசந்தகுமார், புதுக்கோட்டை வழக்குக்கு தடை விதித்து உத்தரவிட்டார். இது தொடர்பாக தமிழக அரசு 2 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யக்கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications