நக்கீரன் கோபால் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு - முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்தார்
சென்னை: நக்கீரன் கோபால், இணையாசிரியர் காமராஜ் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கைத் தொடர்ந்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
நக்கீரன் பத்திரிக்கையில் ‘அ.தி.மு.க.வை கலக்கும் நிழல் முதல்வர்கள்' என்ற தலைப்பில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் கோபால், இணை ஆசிரியர் காமராஜ் ஆகியோர் மீது முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில், தலைமை செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி சார்பில் அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன் சென்னை செசன்சு கோர்ட்டில் மேலும் ஒரு அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அதில், "கடந்த 5-ந் தேதி வெளியான நக்கீரன் பத்திரிக்கையில் ‘அ.தி.மு.க.வை கலக்கும் நிழல் முதல்வர்கள்' என்ற தலைப்பில் செய்தி வெளியாகி உள்ளது. இந்த செய்தி தமிழக அரசுக்கும், என்னுடைய பணிக்கும் களங்கம் ஏற்படும் வகையில் அவதூறாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அந்த செய்தியில் உண்மை தன்மை கிடையாது. வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் அவதூறாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அச்செய்தி அமைந்துள்ளது. இந்த செய்தி வெளியிட்ட நக்கீரன் ஆசிரியர் கோபால், இணை ஆசிரியர் காமராஜ் ஆகிய 2 பேரையும் கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications