'வாலன்டியராக' நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் வாங்கிய கே.என். நேரு!
திருச்சி: பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சம்மன் அனுப்பாமலேயே நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றிருக்கிறார் திமுகவின் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் கடந்த 15-ந் தேதி பங்கேற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்துக்காக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பேனர்கள் வைத்திருந்ததாக கே.என். நேரு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மீது திருச்சி மாநகராட்சி ஆணையர் தண்டபாணி போலீசில் புகார் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து திமுக நிர்வாகிகள் 14 பேர் மீது 11 காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கே.என். நேரு மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனால் கே.என். நேரு மீண்டும் கைது செய்யப்படக் கூடும் என்று தகவல் பரவியது.
இதனால் தாமாகவே கே.என். நேரு உள்ளிட 6 பேர் திருச்சி ஜே.எம். நீதிமன்றத்தில் சரணடைந்தனர். ஆனால் போலீசார் இதை எதிர்பார்க்கவில்லை. வழக்குப் பதிவு செய்த போலீசார் எப்.ஐ.ஆர். போடவும் இல்லை.. நீதிமன்றத்தில் அதைத் தாக்கல் செய்து சம்மன் பெறவும் இல்லை. இதனிடையே நேரு உள்ளிட்டோர் முந்திக் கொண்டு நீதிமன்றத்தில் சரணடைந்ததால், திகைத்துப் போன போலீசார் வேகம் வேகமாக எப்.ஐ.ஆர். போட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
பின்னர் நீதிமன்றம் நேரு உள்ளிட்ட 6 பேருக்கு ஜாமீன் வழங்கியது.
-
திருச்சியில் பட்டப்பகலில் கொடூரம்.. 17 வயது பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம்.. போலீஸ் தீவிர வலைவீச்சு -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications