நித்தியானந்தாவிடம் பணம் கேட்டு மிரட்டினாரா சன் நியூஸ் செய்தி ஆசிரியர்?
சென்னை: நித்தியானந்தா உள்ளிட்ட பலரைப் பற்றிய செய்திகளை ஒளிபரப்புவதோடு அவர்களை மிரட்டி கோடிக்கணக்கான ரூபாய்களை பறிப்பதுதான் சன் நியூஸ் செய்தி ஆசிரியர் ராஜாவின் முக்கியமான வேலை என்று சன் குழுமத்தின் முன்னாள் சி.இ.ஒ சக்சேனா திடீரென குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று மாலை வந்த சக்சேனா, ஐயப்பன் ஆகியோர் சன்குழும நிர்வாக இயக்குநர் கலாநிதி மாறன், சன்பிக்சர்ஸ் செம்பியன், தினகரன் பதிப்பாளர் ஆர்.எம்.ரமேஷ் மற்றும் கண்ணன் ஆகிய அனைவரும் தங்களை கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதாக புகார் கூறினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் சக்சேனா பேசுகையில்,
நான் ஜெயிலில் இருந்தபோது சன் குழுமத்தைச் சேர்ந்த கலாநிதிமாறன் சொன்னதன் பேரில் என் மனைவியை மிரட்டி 12 கோடி ரூபாய் பணம் பறித்துக்கொண்டு போயிருக்கின்றனர். இதற்கான வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன. சித்தூரில் இருந்து ஆட்களை கூட்டிவந்து எங்களை கொலை செய்துவிடுவதாக மிரட்டுகின்றனர்.
சன் நியூஸ் செய்தி ஆசிரியர் ராஜாவிற்கு அடுத்தவரை மிரட்டி பணம் பறிப்பதுதான் வேலை. தமிழ்நாடு முழுவதும் நெட்ஒர்க் வைத்துக்கொண்டு ஏதாவது ஒரு தொழிற்சாலையை பற்றி படம் எடுத்துவிட்டு பின்னர் சுற்றுச்சூழல் சீர்கேடு என்று செய்தி போடுவார்கள். பின்னர் அதே தொழிற்சாலை அதிபர்களை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் கேட்டு பேரம் பேசுவார்.
நித்தியானந்தா வழக்கிலும் இப்படித்தான் ஆனது. அவரிடம் பணம் கேட்டு அது கிடைக்காது என்று தெரிந்த பின்னர்தான் ராஜாவும், சன்நியூஸ் ஊழியர்களும் இந்த செய்தியை வெளியிட்டனர்.
இதேபோல் பலரிடம் பணம் கேட்டு மிரட்டியதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. இப்போது நான் ஐயப்பன் புகாருக்காக உடன் வந்தேன். என்னுடைய புகார் தயாராகிக் கொண்டிருக்கிறது. அது அனைவரின் முகத்திரையையும் கிழிக்கும். விரைவில் அந்த புகாரைக் கொடுப்பேன் என்றார்.
இதைத் தொடர்ந்து பேசிய ஐயப்பன், சன் பிக்சர்ஸிடமிருந்து எனக்கு 36 கோடி ரூபாய் வர வேண்டியிருக்கிறது. அதைக் கேட்டால் ஆர்.எம். ரமேஷ், கண்ணன், செம்பியன், ஆகியோர் என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டுகின்றனர் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications