பாகிஸ்தானில் 6 வயது இந்து சிறுமி சீரழிப்பு: குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க பிலாவல் உத்தரவு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் 6 வயது இந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் சர்தாரியின் மகனும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பிலாவல் பூட்டோ உத்தரவிட்டுள்ளார்.
பாகிஸ்தானின் சிந்து மாகாணம் உமர்கோட் மாவட்டத்தில் உள்ள குலாம் நபி ஷா நகரில் வசிக்கும் 6 வயது இந்து சிறுமி இம்மாத துவக்கத்தில் கடத்தி கற்பழிக்கப்பட்டார். அவருக்கு உமர்கோட், மிர்புர்காஸ், ஹைதராபாத்தில் உரிய சிகிச்சை கிடைக்காததால் அவரின் உறவினர்கள் சிறுமியை கராச்சி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
இந்நிலையில் இந்த மனிதத் தன்மையற்ற செயலைச் செய்தவர்கள் மீது கடும் நடிவடிக்கை எடுக்க ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும், அதிபர் சர்தாரியின் மகனுமான பிலாவல் பூட்டோ சிந்து மாகாண அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் சிறுமிக்கு தேவையான மருத்துவ உதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளைச் செய்யுமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
கராச்சியில் உள்ள ஷஹீத் மோஹ்தர்மா பெனாசிர் பூட்டோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமிக்கு பிலாவல் பூங்கொத்தை அனுப்பி வைத்துள்ளார்.
பாகிஸ்தானின் சிந்து மற்றும் பலுசிஸ்தான் ஆகிய மாகாணங்களில் வசிக்கும் இந்து சமூகத்தினரை கடத்துதல், கொடுமைப்படுத்துதல் போன்ற சம்பவங்கள் இந்த ஆண்டில் மட்டும் பல முறை நடந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications