மைத்துனருடன் கள்ளத்தொடர்பு: கணவனை 11 துண்டுகளாக வெட்டிக் கொன்ற பெண்
மும்பை: மும்பையில் மைத்துனருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண் தனது கணவரை ஆள் வைத்து கொன்று உடலை 11 துண்டுகளாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை டிட்வாலா பகுதியைச் சேர்ந்தவர் மெகதார்(31). பால் வியாபாரி. அவர் தனது இரண்டாவது மனைவி ஆதித்யாவுடன்(29) வசித்து வந்தார். இந்நிலையில் ஆதித்யாவுக்கும் மெகதாரின் சகோதரர் பர்வேஷுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த மெகதார் மனைவியைக் கண்டித்துள்ளார்.
உடனே ஆதித்யா தனது கள்ளக்காதலன் மற்றும் கூலிப்படையுடன் சேர்ந்து மெகதாரை கொலை செய்தார். மேலும் அவரது உடலை 11 துண்டுகளாக வெட்டி ஒரு சாக்குப்பையில் போட்டு அப்பகுதியில் உள்ள கோவில் அருகே போட்டுவிட்டனர். ஏதோ சாக்குமூட்டை கோவில் அருகே கிடப்பது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து மூட்டையை திறந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து விசாரணை நடத்தியபோது தான் இறந்தவர் மெகதார் என்றும், கள்ளத்தொடர்பால் மனைவியே ஆள் வைத்து கொன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் ஆதித்யாவை கைது செய்தனர்.
இது குறித்து டிட்வாலா இன்ஸ்பெக்டர் ராஜேந்திர நாயக் கூறுகையில்,
மெகதாரை கயிறால் கழுத்தை இறுக்கியும், முகத்தில் தலையணை வைத்து அழுத்தியும் கொலை செய்துள்ளனர். அதன் பிறகு அவரது உடலை 11 துண்டுகளாக வெட்டி சாக்குப்பையில் போட்டு கோவில் அருகே வீசிவிட்டனர். இந்த கொலையில் தொடர்புடைய பிறரையும் தேடி வருகிறோம் என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications