கூடுதலாக உழைத்தாலும் பெண்களுக்கு கூலி கம்மிதான்… அதிரடி ஆய்வு
வாஷிங்டன்: பெண்கள் என்னதான் மாங்கு மாங்கென்று மாதக்கணக்கில் உழைத்தாலும் ஆண்களை விட குறைவாகவே சம்பாதிக்கின்றனராம்!. ஆண்களுக்குச் சமமாக வேலை பார்த்தலும் அவர்களை விட குறைவான கூலியே பெறுகின்றனர் என்று சமீபத்திய சர்வே ஒன்றில் தெரியவந்துள்ளது.
கூலித் தொழில் தொடங்கி விண்வெளிப் பயணம் வரை ஆண்களுக்கு இணையாக இன்று பெண்களும் அனைத்து துறைகளிலும் கால்பதிக்க ஆரம்பித்து விட்டனர். ஆண்கள் பார்க்கும் அத்தனை வேலைகளையும் அவர்களாலும் பார்க்க முடிகிறது. ஏன் ஆண்களை விட அதிபுத்திசாலிகளாகவும் பெண்கள் உள்ளனர். உண்மையில் ஆண்களை விட திறமையாகவே பெண்கள் பணியாற்றுகின்றனர். ஆனால் சம்பளம் என்று வரும்போது மட்டும் ஆண்களை விட குறைச்சலாகவே பெண்களுக்கு தருகிறார்களாம்.
இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் கனடாவின் லேக்ஹெட் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா பெண்களின் நிலை
வல்லரசான அமெரிக்கா உள்ளிட்ட நாட்டிலேயே இந்தக் கதைதானாம். தொழில் ரீதியாக வளர்ச்சி அடைந்த அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. ஒரே வேலை பார்த்தாலும் ஆண்களை விட குறைவான சம்பளம்தான் பெண்களுக்கு கொடுக்கப்படுகிறது.

மட்டம் தட்டும் ஆண்கள்
சில இடங்களில் ஒரு வேலையில் ஆண்கள் குறைவாக இருந்து, பெண்கள் அதிகமாக இருக்கும்பட்சத்தில், அப்போது பெண்களுக்கு நல்ல ஊதியமும், விரைவிலேயே பதவி உயர்வும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாம்.இல்லாவிட்டால் பெண்களை வளர விடுவதே இல்லையாம் இந்த ஆண்கள்.
அதேசமயம், ஆண்களும், பெண்களும் ஒரு இடத்தில் சம அளவில் பணியில் இருந்தால் ஆண்கள்தான் வேகமாக முன்னுக்கு வந்து விடுகிறார்களாம். பெண்களை மட்டம் தட்டித் தட்டி கீழேயே வைத்து விடுவார்களாம்.

ஒரே வேலை பார்த்தாலும்...
ஒரே வேலை பார்க்கும் ஆண், பெண் இரு பாலினரில், ஆண்களுக்கு அதிக சம்பளமும், அவர்களை விட பெண்களுக்கு குறைந்த சம்பளமும் தரப்படுவதாக கருத்துக் கணிப்பில் தகவல் கிடைத்துள்ளது.

ஸ்லோவானியாவில் சம ஊதியம்
ஸ்லோவானியா நாட்டில்தான் ஆண், பெண் இருவருக்கும் சம அளவிலான ஊதியம் தரப்படுகிறதாம். அதை விட முக்கியமாக ஆண்களை விட பெண்களுக்கு அங்கு சற்று கூடுதலாகவே ஊதியம் கிடைக்கிறதாம். மெக்சிகோ, பிரேசில், ஸ்வீடன், ஹங்கேரி ஆகிய நாடுகளில் பெண்களும், ஆண்களும் கிட்டத்தட்ட சம அளவிலான ஊதியம் பெறுகின்றனராம்.

கூடுதலாக உழைக்கும் பெண்கள்
ஜப்பான், செக், ஆஸ்திரியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் ஒரே வேலையில் ஈடுபட்டிருக்கும் ஆண்களை விட பெண்களே அதிகம் வேலை பார்க்கின்றனராம். அதாவது கூடுதலாக உழைக்கின்றனராம்.

இந்தியாவிலும் அதேநிலைதான்.
இந்தியாவிலும் கூட கட்டிடத்தொழிலாளர்களுக்கு பெண்களுக்கு குறைந்த கூலியும், ஆண்களுக்கு அதிக கூலியும் கொடுக்கப்படுகிறது. சில அலுவலகங்களில் ஒரே வேலையை ஆண்களும், பெண்களும் பார்த்தாலும் ஆணுக்கு ஒரு சம்பளமும், பெண்ணுக்கு ஒரு சம்பளமும் தரப்படுகிறது என்கின்றனர் பெண்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications