கட்காரி தொடர்ந்த அவதூறு வழக்கு: ஜாமீன் பெற்ற கையோடு திக்விஜய் சபதம்
டெல்லி: பாஜக தலைவர் நிதின் கட்காரி தொடர்ந்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கிற்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கியதில் ஒரு பெரும் தொகையை பெற்றதாகக் கூறப்படும் பாஜக எம்பி அஜய் சன்செட்டியுடன் வியாபாரம் செய்வதாக பாஜக தலைவர் நிதின் கட்காரி மீது காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் குற்றம்சாட்டினார். இதையடுத்து கட்காரி திக்விஜய் சிங் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரிதத் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் சுதேஷ் குமார் திக்விஜய் சிங்கை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கடந்த 17ம் தேதி உத்தரவிட்டார்.
அதன்படி திக்விஜய் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றார். நீதிபதி இந்த வழக்கை வரும் ஜனவரி மாதம் 31ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
ஜாமீன் பெற்று வெளியே வந்த திக்விஜய் சிங் கட்காரி மீது தான் கூறிய புகார்களை ஆதாரங்களுடன் நிரூபிப்பதாக தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், நிதின் கட்காரியைப் பற்றி நீதிமன்றத்தின் முன்பு நான் அனைத்தையும் தற்போது கூற முடியும். அவர் எப்படிபட்ட தொழில் அதிபர் என்றும், அவருடைய நிறுவனங்கள் அனைத்தும் போலி என்றும், அவர் எப்படி லாபம் சம்பாதித்தார் என்றும் கூற முடியும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications