பள்ளி மாணவி மரணத்திற்கு கண்டனம்... உடலை வாங்க மறுப்பு... பொதுமக்கள் மறியல்!

Subscribe to Oneindia Tamil

Rape-murder victim Punitha
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் அருகே பள்ளி மாணவி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை அளிக்கவேண்டும் என்று வலியுறுத்தி கருங்குளம் கிராமத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் உருவாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் தாதன்குளத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள் மகள் புனிதா. இவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அவரது சடலம் நேற்று காலை ரயில்வே பாலம் அருகில் இருக்கும் முட்புதரில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. சடலத்தைக் கைப்பற்றிய செய்துங்கநல்லூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் சம்பவம் நடைபெற்று 24 மணிநேரத்திற்குள் சுப்பையா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் இந்த பகுதியில் அடிக்கடி பாலியல் பலாத்கார சம்பவம் நடைபெறுவதாகவும், போலீசார் பெண்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்கவேண்டும் என்று கூறியும் ஸ்ரீ வைகுண்டத்தை அடுத்த கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மாணவியின் மரணத்திற்கு தீர்வு கிடைக்கும் வரை இந்த இடத்தை விட்டு நகரமாட்டோம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். அப்போது அங்குவந்த போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் வந்து தங்களின் கோரிக்கைக்கு பதிலளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மாவட்ட ஆட்சித்தலைவர் வரும் வரை மாணவியின் உடலை வாங்கமாட்டோம் என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருங்குளம் கிராமத்தில் பெண் மானபங்கம் செய்யப்பட்ட வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அந்த கொலைக்கான குற்றவாளியை இதுவரை போலீசார் கைது செய்யவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சுப்பையா, பழிவாங்கும் நடவடிக்கையாகவே மாணவியை பலாத்காரம் செய்து கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+