பள்ளி மாணவிக்கு முத்தம் கொடுத்த உடற்பயிற்சி ஆசிரியர்
மதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பள்ளி மாணவிக்கு முத்தம் கொடுத்த உடற்பயிற்சி ஆசிரியர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்புவனம் அருகே கீழடி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் 28 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் 21 பேர் பெண் ஆசிரியர்கள், 7 பேர் ஆண்கள்.
இந்தப்பள்ளியில் சுரேஷ்குமார் உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மைதானத்தில் மாணவிகள் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது ஒரு மாணவியை மட்டும் ஆசிரியர் தனியாக அழைத்துள்ளார். அருகில் இருந்த கழிவறைக்குள் மாணவியை அழைத்துக்கொண்டு போய் முத்தமிட்டதாக கூறப்படுகிறது.
இதனை மற்ற மாணவிகள் பார்த்துவிட்டு சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோரிடம் கூறவே அவர்கள் பள்ளிக்கு வந்து தகராறு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அதிகாரி கலாவதி தலைமையில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது சுரேஷ்குமாரை வீட்டிற்கு அனுப்பிவைத்து விட்டனர்.
உடற்பயிற்சி ஆசிரியர் முத்தம் கொடுத்தது உண்மைதான் என்று பள்ளி மாணவிகள் அனைவரும் கூறிவருகின்றனர். ஆனால் இந்த சம்பவம் பற்றி தலைமையாசிரியர் தங்கவேல் எந்த தகவலையும் கூற மறுத்துவிட்டார். ஒரு சில ஆசிரியர்களின் செயல்களினால் மாணவிகளின் கல்வி பாதியிலேயே நிறுத்தப்படும் நிலைக்கு ஆளாகிறது.
இது தொடர்பாக மாணவியின் பெற்றோர்கள் திருப்புவனம் போலீசில் புகார் அளிக்கத்துள்ளனர். முறைகேடாக நடந்துகொண்ட ஆசிரியர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications