2012-ல் பத்திரிகையாளர்கள் நிலை எப்படி? மேரி கால்வின் உட்பட 89 பேர் பலி! 879 பேர் கைது!
டெல்லி: 2012-ம் ஆண்டுதான் பத்திரிகையாளர்களுக்கு மிக மோசமான ஆண்டாக அமைந்திருக்கிறது.1995-ம் ஆண்டிலிருந்து 2012-வரையான புள்ளி விவரங்களின் அடிப்படையில் பத்திரிகையாளர்களும் ப்ளாக்கர்களும் ஊடக செயற்பாட்டாளர்களும் அதிகம் பாதிப்புக்குள்ளான ஆண்டும் இதுவே!
அச்சு, காட்சி, இணைய ஊடகங்களில் பணியாற்றுகின்ற செய்தியாளர்கள் செய்தி சேகரிக்கக் கூடிய இடங்களிலேயே மிகவும் ஆபத்தானது யுத்த முனைதான்! யுத்த களத்தில் நின்று கொண்டு செய்திகளை சேகரிப்பது என்று ஒரு வகை. யுத்த களத்தில் போராளியாக நின்று கொண்டு செய்திகளை வெளியிடுவது என்பது ஒருவகை. முந்தைய வகைக்கு சாட்சி, இலங்கையின் போர்க் குற்றங்களுக்கான நேரடி சாட்சியாக திகழ்ந்த மேரி கால்வின்.. இவர் இந்த ஆண்டு பலியானார். 2-வது வகைக்கு சாட்சி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கப் போராளியாக இருந்தாலும் 2009-ல் தாம் குண்டுவைத்து தம்மையே சாகடித்துக் கொண்ட கடைசி நிமிடம் வரை புலிகளின் குரல் வானொலி மூலம் செய்திகளை கள நிலைமையை உலகுக்கு சொன்ன ஊடகவியலாளர் தி. தவபாலன். இந்த 2-ம் வகை என்பது மிகவும் அரிதானது.
குறிப்பாக 2012-ம் ஆண்டில் கொத்து கொத்தாக நூறு நூறாக மனித உயிர்கள் மரித்துப் போன சிரியா, சோமாலியா, பாகிஸ்தான் நாடுகளில்தான் அதிகளவிலான பத்திரிகையாளர்கள் பலிகொள்ளப்பட்டனர். கடந்த காலங்களை ஒப்பிடுகையில் இணையதள செய்தியாளர்கள், இணைய வலைப்பூக்கள் நடத்துவோரும் நடப்பு 2012-ம் ஆண்டு கடுமையான அளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். எல்லைகடந்த பத்திரிகையாளர்கள் அமைப்பு வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்களைப் பார்க்கலாம்

பத்திரிகையாளர்கள் பாதிக்கப்பட்ட புள்ளிவிவரம்
2012-ம் ஆண்டில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை- 89. கைது செய்யப்பட்டோர் 879 பேர். தாக்குதல் அல்லது அச்சுறுத்தலுக்குள்ளானோர் எண்ணிக்கை-1993. கடத்தப்பட்ட பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை 38. தாய்நாடுகளில் வாழ முடியாமல் அச்சுறுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடியவர்கள் எண்ணிக்கை 73! பலியான இணைய பத்திரிகையாளர்கள் 47.. கைது செய்யப்பட்டோர் 144. இதில் மணிப்பூரில் நேற்று கலவரத்தைத் தடுக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த டிவி நிருபரும் அடக்கம்!

ஆபத்தான நாடுகள்
பத்திரிகையாளர்களின் உயிரைக் குடிக்கின்றன ஐந்து ஆபத்தான நாடுகள் இருக்கின்றன. சிரியாவில் 2012ல் 17 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். 4 மீடியா உதவியாளர்களும் கொல்லப்பட்டிருக்கின்றன. சோமாலியாவில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதுவும் செப்டம்பருக்கு பிந்தைய மாதங்களில் மட்டும் சோமாலியாவில் 7 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். இதில் 24 மணிநேரத்தில் இருவர் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஒருவர் துப்பாக்கியால் சுட்டும் மற்றொருவர் தலை துண்டிக்கப்பட்டும் கொல்லப்பட்டுள்ளனர். சோமாலியாவில் 18, பாகிஸ்தானில் 10, மெக்சிகோவில் 6 பிரேசிலில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆபத்தான சிறைகள்
உலகில் அதிகளவில் பத்திரிகையாளர்கள் சிறைவைக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தை துருக்கி பெற்றுள்ளது. 42 பத்திரிகையாளர்களும் 4 மீடியா பணியாளர்களும் சிறை வைக்கப்பட்டிருக்கின்றனர். இந்தப் பட்டியலில் 2-வது இடம் சீனாவுக்கு! 30 பத்திரிகையாளர்களும் 69 நெடிஜென்ஸ் எனப்படும் இணைய பத்திரிகையாளர்களும் சிறை வைக்கப்பட்டிருக்கின்றனர். மூன்றாவது இடத்தை எரித்திரியா பெற்றுள்ளது. இந்த நாட்டில் 28 பேர் சிறைவைக்கப்பட்டிருக்கின்றனர். ஈரானில் 26 பேர் சிறை வைக்கப்பட்டுள்ளனர். சிரியாவில் 21 பேர் சிறை வைக்கப்பட்டிருக்கின்றனர்.

மேரி கால்வின்
ஆஸ்திரியாவில் 1956-ம் ஆண்டு பிறந்த மேரி கால்வின் இங்கிலாந்தின் தி சண்டே டைம்ஸ் செய்தியாளராக பணியாற்றினார். இனப்போர் நிகழ்ந்த செச்சன்யா, கொசாவோ, சியாராலியோன், ஜிம்பாப்வே, இலங்கை, கிழக்கு திமோர் என அனைத்து நாடுகளிலும் தன் கால்தடம் பதித்து உண்மையை உலக்குச் சொன்னவர். 2001-ம் ஆண்டு ஏப்ரல் 16-ந் தேதி தமிழீழ விடுதலைப் புலிகளின் பகுதியிலிருந்து ராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு செல்ல முயன்றபோது ராணுவத் தாக்குதலுக்குள்ளாகி ஒரு கண்ணைப் பறிகொடுத்தவர். தம்மை ஜேர்னலிஸ்ட் ..ஜேர்னலிஸ் என்று கூக்குரல் எழுப்பிய போதும்தாம் தாக்குதலுக்குள்ளான கதையை விவரித்த போது இலங்கையின் போர்க்குற்ற சாட்சியாக வர்ணிக்கப்பட்டவர். 2011-ல் லிபியா, துனிசியா, எகிப்து என அரபு புரட்சி நடந்தேறிய நாடுகளிலும் பயணித்தவர். கடைசியாக சிரிய ராணுவத்தின் தாக்குதலில் சிக்கி கால்வினும் பிரெஞ்ச் புகைப்படக் கலைஞர் ஒருவரும் இந்த ஆண்டு பிப்ரவரி 22-ந் தேதி பலியானார்கள். அவரது ஊடகப் பணி வளரும் ஊடக தலைமுறைக்கு ஒருபாடம்!
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications