கர்நாடகா: ஈஸ்வரப்பா வீட்டு ரெய்டில் சிக்கியது 37 கிலோ வெள்ளி-2 கிலோ தங்கம்!

கர்நாடக மாநில பாரதிய ஜனதா தலைவரும் துணை முதல்வருமான ஈஸ்வரப்பாவும் அவரது குடும்பத்தினரும் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.50 கோடிக்கும் அதிகமாக சொத்து குவித்ததாக கடந்த 13-ந் தேதி நாகலட்சுமி பாய் என்பவர் ஆளுநர் பரத்வாஜிடம் புகார் கொடுத்தார். இப்புகார் கொடுக்கப்பட்ட அதே நாளில் வழக்கறிஞர் வினோத்குமார் என்பவர் ஷிமோகா லோக் அயுக்தா நீதிமன்றத்தில் இதே போல் புகார் அளித்தார்.
இப்புகாரின் அடிப்படையில் ஈஸ்வரப்பா மற்றும் அவரது மகன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. பின்னர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய லோக் அயுக்தா போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து இன்று காலை ஈஸ்வரப்பாவின் பெங்களூர் மல்லேஸ்வரம் வீடு, ஷிமோ வீடு, அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான கல்வி அறக்கட்டளை, உதவியாளர் சோமு சேகர் வீடு உட்பட 7 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் மட்டுமின்றி 37 கிலோ வெள்ளி, 2 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டிருக்கிறது.
முன்னதாக தமது வீட்டில் நடத்தப்படும் சோதனை குறித்து கருத்து தெரிவித்த ஈஸ்வரப்பா, உண்மை வெளிவரட்டும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது தங்கமும் வெள்ளியும் கிலோ கணக்கில் கைப்பற்றப்பட்டிருப்பதால் அவர், துணை முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது,.
-
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications