ஸ்ரீ ரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு… பல்லாயிரக்கணக்கோனோர் தரிசனம்

மகாவிஷ்ணுவின் 108 திவ்யதேசங்களில் முதன்மையானதாக போற்றப்படுவது ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் ஆலயம். இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாததியன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான விழா கடந்த 13ம் தொடங்கியது. முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை 4.45 மணிக்கு நடைபெற்றது. பல்லாயிரக்காண பக்தர்களின் கோவிந்தா முழக்கத்திற்கு இடையே பரமபதவாசல் என அழைக்கப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் வெள்ளத்தில் நம்பெருமாள் பரமபத வாசலை கடந்து, திருக்கொட்டகையில் பிரவேசித்தார்.மூலவர், முத்தங்கி அலங்காரத்தில் காட்சி தந்தார்.
பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக மத்திய மண்டல ஐ.ஜி., அலக்ஸாண்டர் மோகன் தலைமையில், உயர்அதிகாரிகள் மற்றும் 4,000 போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது, வி.ஐ.பி., பாஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தரிசனத்துக்கு, வரிசையில் நிற்கும் பக்தர்கள், முன்னுரிமை அடிப்படையில் கோவில் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். சொர்க்கவாசல் திறப்பை ஒட்டி ஸ்ரீரங்கமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
பார்த்தசாரதி கோயிலில் முதல்வர் தரிசனம்
வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேனி பார்த்தசாரதி கோயிலில் அதிகாலை 4.05 மணிக்கு நடந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி உள்ளிட்ட நான்கு பேர் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் திருப்பூர் வீரராகவ பெருமாள் ஆலயத்தில் இன்று அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று கோவிந்த முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சிவகங்கை, திருக்கோஷ்டியூரில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, இன்று இரவு 10 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்படும். வாசலில், பெருமாள் நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிப்பார். இதை தொடர்ந்து, இராப்பத்து உற்சவத்தை முன்னிட்டு, அடுத்த 9 நாட்கள் பரமபதவாசல் திறந்திருக்கும்.












Click it and Unblock the Notifications