6.8க்கும் 5.4க்கும் காதல்... பிரேசில் கடற்கரையில் கோலாகலம்!

17 வயதான எலிசனி செம உயரம். உயரமென்றால் 6 அடி 8 அங்குலம். நின்றால் நீண்ட ஏணி போல தெரிவார். நடந்தால் ஏதோ ஒரு கட்டடம் அசைந்து வருவது போல பிரமை ஏற்படும். இவரது காதலர்தான் பிரான்சினால்டோ டா சில்வா கார்வால்ஹோ. 22 வயதான இவர் சாதாரண உயரம் கொண்டவர். அதாவது 5 அடி 4 அங்குலம்தான்.
இருவரும் தங்களது உயரப் பொருத்தம் குறித்துச் சற்றும் கவலைப்பட்டது இல்லையாம்.அதுதான் மனங்கள் இரண்டும் நெருக்கமாகி விட்டதே, உயரம் எட்டாமல் போனால் என்ன என்று சிரித்தபடி கேட்கிறார் எலிசனி.
இருவரும் சேர்ந்து பிரேசில் நாட்டின் முக்கியப் பகுதிகளுக்கு அவ்வப்போது சுற்றுலா செல்லத் தவறுவதில்லை. அப்போதெல்லாம் இவர்களைப் பார்க்கக் கூட்டம் கூடி விடுமாம். இருந்தாலும் இவர்கள் சங்கோஜப்படுவதில்லையாம். மற்றவர்கள் செய்யும் கேலி கிண்டல்களையும் இவர்கள் பொருட்படுத்துவதில்லையாம்.
எலிசனியின் பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்பட்ட ஒருகட்டி காரணமாகவே அவருக்கு அபரிமிதமான வளர்ச்சி ஏற்பட்டு இப்படி உயரமாகி விட்டாராம். டாக்டர்கள் தற்போது அந்தக் கட்டியை அகற்றி விட்டனர். இதனால் மேலும் உயருவது நின்று விட்டது.
மாடலாக வேண்டும் என்ற தீவிர எண்ணம் கொண்டிருக்கிறார் எலிசனி. தனது உயரம், காதல் குறித்து அவர் கூறுகையில், எனது காதலரின் பெர்சனாலிட்டிதான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மிகவும் அன்பாகப் பழகுவார், எளிமையானவர், நட்பானவர். மற்றவர்களிடம் இரக்கம் காட்டுவார். என் மீது நிறைய பிரியம் வைத்துள்ளார்.
எங்களது மாறுபட்ட உயரம் காரணமாக எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை. என்ன, வெளியில் போனால் இருவரும் கை கோர்த்துக் கொண்டு போக முடியாது. முத்தம் கொடுக்க வேண்டும் என்றால் நான் நன்றாக குணிந்து முத்தமிட வேண்டும்.
மற்றபடி இருவரும் சேர்ந்து வெளியே போகும்போது அவரைப் பார்த்தால் எனது மகன் அல்லது தம்பி போலத் தெரிவார். ஆனால் இதையெல்லாம் நினைத்து நான் கஷ்டப்பட்டதில்லை. உண்மையில் நான் அவரைத் தேர்வு செய்யவில்லை, கடவுள்தான் இந்தத் தேர்வை செய்தவர் என்று கூறுகிறார் எலிசனி.
காதலுக்கு கண் இல்லை என்பார்கள், இவர்களுக்கு உயரமும் இல்லை... அதுதான் காதல்.












Click it and Unblock the Notifications