திமுக கூட்டத்திற்கு தூத்துக்குடி மாநகராட்சி அனுமதி மறுப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் திமுக கூட்டம் நடக்கவிருக்கும் மேடை, பந்தலை அகற்ற போலீசார் வந்தனர். இதையடுத்து போலீசாருக்கும், திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் திமுக கூட்டத்திற்கு இன்னும் அனுமதி அளிக்கவில்லை என்று மாநகராட்சி தரப்பில் கூறப்படுகிறது.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக செயல்வீரர்கள் கூட்டம் தூத்துக்குடியில் அக்கட்சியின் பொருளாளர் முக ஸ்டாலின் தலைமையில டிசம்பர் 28ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துககுடி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மைதானத்தில் கூட்டத்தை நடத்த மாநகராட்சியில் மனு வழங்கி பணம் கட்டினர். மேலும் 25 டிஜிட்டல் பேனர்கள் வைக்கவும் அனுமதி பெற்றிருந்தனர்.
இந்த அனுமதி கடிதத்தை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் கொடுத்து கூட்டம் நடத்த காவல்துறை அனுமதியையும திமுகவினர் பெற்றனர். இந்நிலையில் திமுக கூட்டம் நடத்த அனுமதியில்லை என தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் அக்கட்சியினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கூட்டம் நடைபெறும் அரங்கம், பந்தல் ஆகியவற்றை அகற்ற நேற்று போலீசார் குவிந்தனர். இதனை அறிந்த திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் சம்பவ இடத்தில் திரண்டனர். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், கூடுதல் சூப்பிரண்டு கண்ணன், உதவி சூப்பிரண்டு மகேஷ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
மேலும் மேடை, பந்தலை அகற்ற ஜேசிபியும் வந்தது. இதனால் திமுகவினருக்கும், போலீசாருக்கும் இடையே வாககுவாதம் ஏற்பட்டது. கூட்டத்திற்கான அனுமதியை திமுகவினர் காட்டினர். அதன் பிறகு போலீசார் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கூட்டம் நடத்த அனுமதி மறுத்தது குறித்து மாநகராடசி சார்பில கேட்டபோது,
தூத்துக்குடி பஸ் நிலையம் அருகே தனியார் பொருட்காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதே இடத்தின் அருகில் தான் திமுகவினருக்கு கூட்டம் நடத்த அனுமதி கேட்டு்ள்ளனர். அவர்களது அனுமதி பரீசிலனையில் தான் இருந்தது. ஒப்புதல் வழங்கப்படவில்லை.
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடும் இடத்தின் அருகில் கட்சி கூட்டத்தை நடத்த அனுமதி வழங்கினால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். எனவே கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது என்றனர்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications