98 வயதில் ஒரு குடி வெறியர்.. மகன் பணம் தராததால் தற்கொலை செய்த கொடுமை!
சென்னை: குடிவெறி மனிதர்களை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறது என்று பாருங்கள். 98 வயதான ஒரு குடுகுடு தாத்தா, தான் மது அருந்த மகன் பணம் தரவில்லையே என்ற கோபத்தில் தற்கொலை செய்து கொண்டு செத்துப் போயுள்ளார்.
100 வயது வரை வாழ்ந்து சரித்திரப் புத்தகத்தில் இடம் பெற வேண்டிய அவர், குடிவெறியில் சறுக்கி விழுந்து அவப்பெயருடன் போய்ச் சேர்ந்துள்ளார்.
சென்னை கொடுங்கையூர் சூழ்புனைகரையைச் சேர்ந்தவர் வீரராகவன். இவருக்கு 98 வயதாம். இவரது மகன் வாசு. வீரராகவனுக்கு இந்த வயதிலும் குடிப் பழக்கம் உண்டாம். டெய்லி குடிப்பாராம். இதற்காக தினமும் தனது தந்தைக்கு 100 ரூபாய் கொடுப்பாராம் மகன் வாசு. ஆனால் வெள்ளிக்கிழமையன்று பணம் தரவில்லை போலும்.
இதனால் கோபமும் விரக்தியும் அடைந்து விட்டாராம் வீரராகவன். உடனே வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டு விட்டார். அதில் படுகாயமடைந்த அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து போனார்.
எவ்வளவு கொடுமையான சம்பவம் இது...!
-
முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை.. நாமக்கல் அருகே அதிர்ச்சி! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன












Click it and Unblock the Notifications