ராஜஸ்தான் பாஜக எம்.எல்.ஏ.வின் சர்ச்சை பேச்சு -ஸ்கர்ட்டை பரிசாக கொடுத்து மாணவர்கள் போராட்டம்!
ஜெய்ப்பூர்: பள்ளிகளில் மாணவிகள் 'குட்டை பாவாடை' (ஸ்கர்ட்) அணிவதை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்த ராஜஸ்தான் மாநில பாஜக எம்.எல்.ஏ.வின் பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்ததைத் தொடர்ந்து பெண்களின் உடை குறித்து பல்வேறு கருத்துகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. பெண்கள் அனைவரும் இஸ்லாமியர் உடையான பர்தா அணிய வேண்டும் என்று மதுரை ஆதீனம் கூறிய கருத்து தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இதேபோல் ராஜஸ்தான் மாநிலத்தின் அல்வார் தொகுதி எம்.எல்.ஏவான பாரதிய ஜனதாவைச் சேர்ந்த பன்வாரி லால் சிங்கால், தனியார் பள்ளிகளில் மாணவிகள் சீருடையாக குட்டை பாவாடை அணிவதைத் தடை செய்ய வேண்டும் என்றும் இத்தகைய சீருடையால்தான் பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடைபெறுகிறது என்றும் கூறி மாநில அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இக்கடிதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அல்வாரில் உள்ள அவரது வீட்டு முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்திய மாணவிகள், பன்வாரி லால்சிங்காலிடம் குட்டைப் பாவாடையை பரிசாகவும் கொடுத்திருக்கின்றனர்.
"6 வயது சிறுமி குட்டை பாவாடை அணியாமல் சேலையா கட்ட முடியும்? பலாத்கார விஷயங்களில் மாணவிகளின் சீருடைகளைப் பற்றி பேசுகிறவர்கள்.. மாணவர்களின் மனோநிலையைப் பற்றி ஏன் பேசுவதில்லை"? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
பன்வாரிலால்சிங்காலின் கருத்துக்கு முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பேடியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி












Click it and Unblock the Notifications