மகா கும்பமேளா: சங்கராச்சாரியர்கள்- 'அகாடா' சாதுக்கள் இடையே மோதல் அபாயம்!
அலகாபாத்: உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் வரும் ஜனவரி 14-ந் தேதி முதல் தொடங்க இருக்கும் மகா கும்பமேளாவில் இந்து சாதுக்களுக்கும் சங்கராச்சாரிகளுக்கும் இடையே மிகப் பெரும் மோதலை உருவாக்கக் கூடிய அபாயம் இருப்பதை வெளிப்படுத்தி இருக்கிறது.
மகாகும்பமேளா என்பது 12 ஆண்டுகளுக்கு ஓராண்டு வரக் கூடியது. அரைக் கும்பமேளா என்பது 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரக் கூடியது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளாவும் கடைபிடிக்கப்படுகிறது. தற்போது அலகாபாத்தில் மகா கும்பமேளா நடைபெற இருக்கிறது.
மகா கும்பமேளா காலத்தில் புனித நாட்களில் அகாடாக்கள் எனப்படும் சாதுக்களின் பிரிவுகள் வரிசைப்படியாக சென்று புனித நீராடுவர். இதே கும்பமேளா காலத்தில் ஆதி சங்கரர் நிறுவிய அதிகாரப்பூர்வமான 4 சங்கராச்சாரிகளும் ஒன்று கூடி ஆலோசனை நடத்துவர்.
அகாடாக்கள் என்பது இந்து மதத்தைக் காப்பாற்றுவதற்காக ஆதிசங்கரரால் அமைக்கப்பட்ட 'போராளி அமைப்பு'. மொத்தம் 12 அகாடாக்கள் இருக்கின்றன. இதில் பல்லாயிரக்கணக்கான இதில் நாகா சாதுக்கள் எனப்படுகிற நிர்வாண சாதுக்கள் மிகவும் வன்மம் கொண்டவர்கள். கும்பமேளா காலங்களில் இந்த சாதுக்களின் அகாடாக்களிடையே யார் முதலில் புனித நீராடுவது என்பதில் பெரும் மோதலே நடைபெறும். அப்படி புனித நீராடும் சாது பிரிவினருக்கு (அகாடாவினருக்கு)த்தான் இறைவனின் முழு அருளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஹரித்வாரில் பல ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த இத்தகைய மோதல்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
சங்கராச்சாரிகள் என்போர் இந்து மதத்தைப் பரப்புவதற்காக ஆதிசங்கரரால் அமைக்கப்பட்ட 4 மடங்களின் பீடாதிபதிகள்.
தற்போது அகாடாக்களுக்கும் சங்கராச்சாரிகளுக்கும் இடையே பிளவு ஏற்படும் வகையில் அலகாபாத் மகா கும்பமேளாவில் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
கும்பமேளா நடைபெறும் பகுதியில் 4 அதிகாரப்பூர்வ சங்கரமடங்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்படுவதில் பிரச்சனை உருவாகி இருக்கிறது. இதுவரை இதுபோன்ற ஒரு நிலைமை உருவானது இல்லை. இதற்கு அகாடாக்களின் பிரதிநிதிகளே காரணம் என சங்கராச்சாரிகள் கருதுகின்றனர். ஆனால் அகாடா சாதுக்களின் பிரதிநிதிகளோ மவுனம் சாதித்து வருகின்றனர்.
இரு தரப்பினரிடையே நீடிக்கும் மெளனமானது அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் கும்பமேளா காலத்தில் நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சத்தை உருவாக்கி இருக்கிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications