புத்தாண்டு புதிய வாழ்வையும், வளத்தையும் அளிக்கட்டும் - ஜெ. வாழ்த்து
சென்னை: புலரும் புத்தாண்டு, புதிய வாழ்வையும் வளத்தையும் வெற்றிகளையும் வழங்கும் இனிய புத்தாண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, என் அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் என் உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா வாழ்த்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி:
புத்தம் புது நம்பிக்கைகளுடன் மலருகின்ற இந்தப் புத்தாண்டில், தமிழக மக்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தை முதன்மை மாநிலமாக உருவாக்கிட வேண்டும் என்பதும், மக்களின் வாழ்க்கை தரம் உயர்வடைய வேண்டும் என்பதும் உங்கள் அன்பு சகோதரியின் தலைமையிலான அரசின் குறிக்கோளாகும். அதனை செயல்படுத்தும் வகையில், தமிழக அரசு பல்வேறு ஆக்கப்பூர்வமான திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருவதை அனைவரும் நன்கு அறிவர்.
அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியினால் மட்டுமே ஒரு நாடு ஒட்டுமொத்த வளர்ச்சியைப் பெற முடியும்.
எல்லாரும், எல்லாமும் பெற வேண்டும், இங்கே இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்ற எனது அரசின் குறிக்கோளை அடையும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட இந்தப் புத்தாண்டில் உறுதியேற்போம்.
புலரும் புத்தாண்டு, புதிய வாழ்வையும் வளத்தையும் வெற்றிகளையும் வழங்கும் இனிய புத்தாண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, என் அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் என் உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
வைகோ வாழ்த்து
இதேபோல மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், கால வெள்ளத்தில் சோதனை சூழல்கள் தமிழகத்தை முற்றுகையிட்டு 2012 விடைபெற்று 2013ம் ஆண்டில் பிரவேசிக்கிறோம்.
பருவமழை பொய்த்ததாலும், தமிழகத்தில் நதிநீர் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு அண்டை மாநிலங்கள் கேடு செய்ததாலும், மத்திய அரசின் துரோகம் வளர்ந்ததாலும், பெரும் நலிவுக்கும், துன்பத்திற்கும் தமிழக மக்கள் ஆளாகினர்.
இருளுக்குப் பின்னர் வெளிச்சம் வந்துதானே தீரும் என்ற நியதிக்கு ஏற்ப வளமும் செழிப்பும் தமிழகத்திற்கு 2013ம் ஆண்டு வழங்கும் எனும் நம்பிக்கைக் கொள்வோம் என்று வாழ்த்தியுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications