மரண தண்டனை அவசியம் என்பதை டெல்லி கற்பழிப்பு நினைவூட்டுகிறது- சிங்கப்பூர் அமைச்சர்

இந்தியாவைப் போலவே மரண தண்டனையை ஒழிக்காமல் உள்ள நாடு சிங்கப்பூர். அங்கும் இந்தியாவைப் போலவே மரண தண்டனையை ஒழிக்கக் கோரி பல்வேறு விதமான கோரிக்கைகள், போராட்டங்கள் நடந்து கொண்டுதான் உள்ளது. இந்த நிலையில் டெல்லி சம்பவத்தை மேற்கோள் காட்டி மரண தண்டனை தேவைதான் என்று அந்த நாட்டு சட்ட அமைச்சர் சண்முகம் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேஸ்புக்கில் அவர் எழுதியிருப்பதாவது...
ஒரு இளம் இந்தியப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும், அதன் தொடர்ச்சியாக அவர் மரணத்தைத் தழுவியதும் அனைவரையும் அதிர வைத்துள்ளது. அது பட்டப் பகலில் நடந்துள்ளது. ஒரு இளம் உயிர் மிகக் கொடுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அந்த இளம் பெண்ணை நம்பி அவரது குடும்பத்தினர் இருந்துள்ளனர். தனது நிலத்தை விற்று அப்பெண்ணை அவரது தந்தை படிக்க வைத்துள்ளார்.
நமது ஆழ்ந்த அனுதாபங்களை அந்தக் குடும்பத்திற்கு நாம் தெரிவித்துக் கொள்வோம். இது இதயத்தை முறித்துப் போடும் சம்பவமாக உள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஒவ்வொருவரும் மரண தண்டனையை சந்திக்க வேண்டும் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வர்.
மரண தண்டனை வேண்டாம் என்று வாதிடுவோரிடம் நான் இந்த சம்பவத்தை சுட்டிக் காட்டி வேண்டும் என்று வாதிடுவேன் என்று கூறியுள்ளார் சண்முகம்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications