பிறந்தது 2013 புத்தாண்டு- தமிழகம், புதுவையில் சிறப்பான கொண்டாட்டம்!

சென்னை சாந்தோம் கிறிஸ்துவ தேவாலாயத்தில் கிறிஸ்துவர்கள் ஒன்று கூடி இப்புது ஆண்டை வரவேற்று சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். சென்னை மெரினா கடற்கரையில் கூடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் இப்புத்தாண்டை வரவேற்று கொண்டாடினர்.
புதுச்சேரியிலும் பொதுமக்கள் இப்புத்தாண்டை வரவேற்று கொண்டாடி வருகின்றனர். சென்னையில் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை மற்றும் மாமல்லபுரம் கடற்கரையில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லியில்...
ஆனால் தலைநகர் டெல்லியில் பாலியல் பலாத்கார சம்பவத்தில் மருத்துவ மாணவி உயிரிழந்த சோகத்தில் மூழ்கியிருப்பதால் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டவில்லை. டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் தொடர்ந்தும் போராட்டங்கள் நீடித்தே வருகின்றன.
டெல்லியில் ஹோட்டல்கள், கிளப்புகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, லோக்சபா சபாநாயகர் மீரா குமார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலரும் தங்களது புத்தாண்டு கொண்டாட்டத்தை ரத்து செய்திருந்தனர்.
மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலும் கடுமையான கண்காணிப்புக்கு இடையேயும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்தன.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications