அதிமுகவின் தனித்துப் போட்டி முடிவுக்கு பாமக 'பலத்த' வரவேற்பு-திமுகவையும் சீண்டுகிறது!

இதுகுறித்து அவர் கூறுகையில், திமுகவுக்கும் அதிமுகவுக்கும் ஓராண்டுக்கு முன்பு 2 சவால்கள் விடுத்தேன். இனி வரும் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடும். அதுபோல் இரு கட்சிகளும் போட்டியிடத் தயாரா? வாக்காளர்களிடம் வாக்கு பெறுவதற்காக ஒரு ரூபாய்கூட கொடுக்காமல் தேர்தலைச் சந்திக்கத் தயாரா என்று இரண்டு சவால்கள் விடுத்தேன்.
இதில் முதல் சவாலை அதிமுக ஏற்றுள்ளது. மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. அதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டாவது சவாலையும் அதிமுக ஏற்க முன் வரவேண்டும்.
அதேபோல திமுகவும் தனித்துப் போட்டியிட தயார் என்று அறிவிக்க வேண்டும். அதனை சவாலாக அல்லாமல் திமுகவுக்கு வேண்டுகோளாக வைக்கிறேன்.
1971-ம் ஆண்டு திமுக ஆட்சியில்தான் மதுவிலக்கு தளர்த்தப்பட்டது. இது அதிமுக ஆட்சியிலும் நீடித்து வந்துள்ளது. 2016-ல் பாமக நிச்சயம் ஆட்சிக்கு வரும். அப்போது பூரண மதுவிலக்கு கட்டாயம் அமல்படுத்தப்படும். இரு திராவிடக் கட்சிகளுக்குமே நிர்வாகம் செய்யும் திறமை இல்லை.
ஊழிலின் ஊற்றுக்கண் திமுக என்றால், அதை ஆற்றுநீராகப் பெருக்கியது அதிமுக.
ஒளிமயமான எதிர்காலத்தைக் கொடுக்கிறோம் என்று இப்போது தமிழகம் இருள்மயமாகி உள்ளது. விவசாயம் நசிந்துவிட்டது. கல்வியை அரசே தனியாருக்குத் தாரை வார்த்துள்ளது. அதனால் திராவிடக் கட்சிகளை அகற்ற வேண்டும் என்று மக்கள் கருதுகின்றனர்.
பட்டியல் இனத்தில் இருக்கும் 75 தலித் இனத்தவருக்கோ, காதல் திருமணத்துக்கோ பாமக எதிரான இயக்கம் இல்லை. காதல் என்ற பெயரால் கபட நாடகமாடி பணம் பறிப்பவர்களுக்கும், வன்கொடுமை சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தும் ஒரு சிலருக்கும்தான் பாமக எதிரானது.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கோரியும், காதல் என்ற பெயரால் ஏமாற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பிப்ரவரி 6-ம் தேதி மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யும் வரை என் போராட்டம் ஓயாது என்றார் ராமதாஸ்.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications