புத்தாண்டை கொண்டாட பெங்களூர் சென்ற கோவை சாப்ட்வேர் என்ஜினியர் நண்பர்களால் குத்திக் கொலை
பெங்களூர்: கோவையில் வசித்து வந்த கம்ப்யூட்டர் என்ஜினியர் பெங்களூருக்கு புத்தாண்டை கொண்டாட வந்த இடத்தில் நண்பர்களால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
திருப்பூரைச் சேர்ந்தவர் கார்த்திக் விஷ்ணு(24). கோவை அருகே உள்ள பல்லடத்தில் வசித்து வந்தார். அவர் புத்தாண்டைக் கொண்டாட தனது நண்பர்களுடன் பெங்களூருக்கு வந்தார். அங்கு ஜெயா நகரில் உள்ள சவுத் என்ட் சர்க்கிள் அருகே நேற்று அதிகாலை 1 மணிக்கு மேல் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். லா மார்வெல்லா ஹோட்டலுக்கு அருகில் கிடந்த அவரைப் பார்த்த ஹோட்டல் பாதுகவாலர் ஒருவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
வயிறு, முகம் மற்றும் தொடைகளில் காயம் இருந்த கார்த்திக் புனித ஜான்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலையிலேயே இறந்தார். முதலில் இது விபத்து என்று நினைத்த போலீசாருக்கு ஹோட்டலின் சிசிடிவி கேமராவைப் பார்த்தபோது தான் அது கொலை என்று தெரிய வந்தது.
கார்த்திக்கும் அவரது நண்பர்களும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்றுவிட்டு இரவு 1 மணிக்கு மேல் ஹோட்டலை விட்டு வெளியே வந்துள்ளனர். ஆட்டோவுக்காக அவர்கள் காத்திருந்தபோது நண்பர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கார்த்திக்கை அவரது நண்பர்கள் 5 பேர் சேர்ந்து கத்தியால் குத்திவிட்டு ஆட்டோவில் தப்பியோடிவிட்டது கேமராவில் பதிவாகி இருந்தது.
இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் கார்த்திக்கின் நண்பர்கள் 5 பேரைக் கைது செய்தனர். இந்த கொலை குடிபோதையில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்திக்கின் நண்பர்களில் சிலர் தான் பெங்களூரூவில் வசிக்கின்றனர். மற்றவர்கள் புத்தாண்டைக் கொண்டாட தமிழகத்தில் இருந்து வந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் மேலும் கூறுகையில், கார்த்திக் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தான் பெங்களூர் வந்துள்ளார். பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் 6 மாதங்கள் பணிபுரிந்த கார்த்திக் அங்கிருந்து சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதன் பிறகு கோவை அருகே உள்ள பல்லடத்திற்கு சென்று வீட்டில் இருந்தே அதே நிறுவனத்திற்காக பணிபுரிந்து வந்துள்ளார் என்றனர்.
-
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications