ஒரே நாளில் 12 லட்சம் பீர் பாட்டில்களை உடைத்த குடிமக்கள்... ரூ. 95 கோடிக்கு புத்தாண்டு மது விற்பனை

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் என்றைக்குப் பெருகிப் போனதோ அன்று முதலே திருவிழாக் கோலம்தான் கடைகள் தோறும். திருவிழாக்கள், விசேஷங்கள், விடுமுறை நாட்கள், புத்தாண்டு உள்ளிட்ட நாட்களின்போது மது விற்பனை அமோகமாக இருக்கிறது.
இந்த புத்தாண்டு தினத்திற்கும் கூட்டம் கட்டி ஏறியது. மொத்தம் உள்ள 6800 மதுக் கடைகளிலும் குடிகாரர்கள் கூட்டம் மொய்த்தெடுத்து விட்டது. இதனால் கலலா நிரம்பி வழியும் அளவுக்கு நல்ல வியாபாரமாம்.
பிராந்தி, விஸ்கி, ரம் போன்ற மதுவகைகள் 1 லட்சத்து 80 ஆயிரம் பெட்டிகள் (கேஸ்) விற்பனையாகி உள்ளன. பீர் வகைகள் ஒரு லட்சம் பெட்டிகள் விற்றுள்ளன. ஆக மொத்தம் 2 லட்சத்து 80 ஆயிரம் மதுபான பாட்டில்கள் கொண்ட பெட்டிகள் விற்பனையாகி இருக்கின்றன. பீர் மட்டும் 12 லட்சம் பாட்டில்கள் விற்று தீர்ந்துள்ளன. புத்தாண்டு தின விற்பனை அளவு ரூ. 95 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பீர் மட்டும் 11 கோடிக்கு விற்றுள்ளது.
இந்த விற்பனையானது கடந்த ஆண்டை விட 20 கோடி அதிகமாகும். கடந்த ஆண்டு ரூ. 75 கோடிக்கு மது விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது.
போன வருஷம் ரூ. 75 கோடி, இந்த வருஷம் ரூ. 95 கோடி, அப்படீன்னா அடுத்த வருஷம் ரூ. 115 கோடியா... சியர்ஸ்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications