கற்பழிப்புகள்.. பெண்ணின் பெயரை வெளிப்படுத்தாமல் இருக்கலாமே...?

Subscribe to Oneindia Tamil

Law
- ராஜீவ் கெளடா

டெல்லியில் பாலியல் பலாத்காரத்துக்குள்ளாகி, பின்னர் மரணத்தைத் தழுவிய பெண்ணின் பெயரை வெளியிட வேண்டுமா, வேண்டாமா என்ற விவாதம் மீடியாக்களில் படு வேகமாக கிளம்பியுள்ளது. மத்திய அமைச்சர் சசி தரூர் பெயரை வெளியிட வேண்டும், கற்பழிப்பு தடுப்புச் சட்டத் திருத்தத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆனால் இந்த விவகாரம் சிக்கலானது. இந்திய மீடியாக்கள் இதுவரை பாலியல் பலாத்காரத்துக்குள்ளானவர்களின் பெயர்களை வெளியிட்டு செய்தி போடுவதில்லை. இப்போதும் கூட அவர்கள் டெல்லியில் கொடுமையான முறையில் மாண்டு போன பெண்ணின் பெயரைப் போடாமலேயே உள்ளனர். அதற்குப் பதில் நிர்பயா, அமனத், டாமினி என புணை பெயர்களில் அழைத்து வருகின்றனர்.

அதேசமயம், தற்போது சசி தரூர் பேசிய பேச்சை சில மீடியாக்களில் அதீதமாக வெளியிட்டு பாலியல் பலாத்காரத்துக்குள்ளான பெண்ணின் பெயரை வெளியிட வேண்டும் என்பது போல செய்தி போட ஆரம்பித்துள்ளனர். இது தேவையில்லாத சர்ச்சைகளையே வலுப்படுத்த உதவும். அதற்குப் பதிலாக, ஏன் சசி தரூர் இப்படி திடீரென பேசினார் என்ற பின்னணி குறித்து மீடியாக்கள் செய்தி வெளியிட ஆர்வம் காட்ட வேண்டும்.

புதிய சட்டத்திற்கு பாலியல் பலாத்காரத்துக்குள்ளான பெண்ணின் பெயரைச் சூட்டுவதால் பல பிரச்சினைகள்தான் வெடிக்கும். ஒருவேளை டெல்லி பெண்ணின் பெயரை புதிய சட்டத்திற்குச் சூட்டுவதாக இருந்தால், அதேபோன்ற பாதிப்புக்குள்ளான மற்ற பெண்களின் பெயர்களையும் பல்வேறு சட்டங்களுக்குச் சூட்ட கோரிக்கை எழலாம்.

மேலும் இதை வைத்து அரசியல்வாதிகளும் பல்வேறு சட்டங்களுக்கு தத்தமக்குப் பிடித்தவர்களின் பெயர்களைச் சூட்ட முனையலாம். இதனால் நாடாளுமன்றத்தில் பிரச்சினைகள் வெடிக்கலாம், வெட்டி விவாதங்கள் கிளம்பலாம். ஒன்றுமே இல்லாத பிரச்சினைக்காக வெளிநடப்புகள், அமளிகள் என நாடாளுமன்றம் ஸ்தம்பிப்புகளை சந்திக்க நேரிடலாம்.

பலர் இந்த விஷயத்தில் அமெரிக்காவை சுட்டிக் காட்டலாம். அங்கு ஒரு சட்டத்திற்கு மேகான் என்ற பெண்ணின் பெயரைச் சூட்டியதைச் சுட்டிக் காட்டலாம். அமெரிக்கா வேறு, இந்தியா வேறு என்பதை இவர்கள் உணர வேண்டும். அமெரிக்காவில் சட்டங்களுக்குப் பெயர் சூட்டுவது என்பது சகஜமானது, சட்டப்பூர்வமாக அது அங்கீகரிக்கப்பட்டது. ஒரு எம்.பி. சட்டத்தைப் பரிந்துரைத்தால் அவரது பெயரைக் கூட சூட்ட முடியும்.ஆனால் இந்தியாவில் நிலைமை வேறு.

இந்தியாவைப் பொறுத்தவரை இப்படிப்பட்ட விஷயங்களில் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடாமல் வைத்திருப்பதே நல்லது என்பது எனது கருத்து. அதுவே அவர்களுக்குக் கெளரவத்தைக் கொடுக்கும்.

ராஜீவ் கெளடா

(எழுத்தாளர் ராஜீவ் கெளடா, பெங்களூர் இந்திய நிர்வாகவியல் கழகத்தின் பொது கொள்கை மையத்தின் சமூக அறிவியல் மற்றும் பொருளாதாரத் துறையின் தலைவராகவும், பேராசிரியராகவும் இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+