மோடியை பிரதமராக விடமாட்டேன்: மாயாவதி உறுதி
Subscribe to Oneindia Tamil

நரேந்திர மோடி 4வது முறையாக குஜராத் முதல்வராகியுள்ளார். இதையடுத்து அவர் பிரதமர் ஆவார் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் வேட்பாளருக்கு பாஜகவில் போட்டி நிலவும்போதும் மோடிக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால் மோடி பிரதமராகக் கூடாது என்று சில கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி சேர்ந்துள்ளார்.
குஜராத் மாநில லோக்ஆயுக்தா நீதிபதியாக ஆ.ஏ. மேத்தாவை அம்மாநில ஆளுநர் கமலா பெனிவால் நியமித்ததை எதிர்த்து மோடி அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
இந்த தகவல் அறிந்த பிறகு மாயாவதி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நரேந்திர மோடியை பிரதமராக விட மாட்டேன். வரும் காலத்தில் அவர் பிரதமராகாமல் இருக்க வேண்டியவற்றை செய்வேன் என்றார்.












Click it and Unblock the Notifications