உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானிக்கு 18வது இடம்
ஹூஸ்டன்: ப்ளூம்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ் உலகின் 100 பெரும் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 18வது இடத்தில் உள்ளார்.
ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் உலகில் உள்ள பெரும் பணக்காரர்களை பட்டியலிட்டு வெளியிடுவது வழக்கம். அதன்படி அது 100 பேர் கொண்ட உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. 2012ம் ஆண்டில் பணக்காரர்களின் சொத்துக்களின் அடிப்படையில் தான் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்த பட்டியலில் பணக்காரர் என்றால் அனைவரின் நினைவுக்கு வரும் பில் கேட்ஸுக்கு இரண்டாவது இடம் தான் கிடைத்துள்ளது.
உலக பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவின் முகேஷ் அம்பானிக்கு 18வது இடம் கிடைத்துள்ளது. ஆரக்கிள் கம்பெனி சிஇஓ லாரி எல்லிசன் 8வது இடத்தில் உள்ளார்.

உலகின் நம்பர் 1 பணக்காரர் கார்லோஸ் ஸ்லிம்
மெக்சின் டெலிகம்யூனிகேஷன்ஸ் தலைவர் கார்லோஸ் ஸ்லிம் தான் உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆவார். அவரிடம் 70 பில்லியன் டாலர்களுக்கு அதிகமாக சொத்துக்கள் உள்ளன.

இரண்டாவது இடத்தில் தான் பில் கேட்ஸ்
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். அவரிடம் 60 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்துக்கள் உள்ளன.

பிரபல முதலீட்டாளர் வாரன் பஃப்பட்டுக்கு 4வது இடம்
பிரபல முதலீட்டாளரான வாரன் பஃப்பட் உலகின் 4வது பணக்காரராக உள்ளார். அவர் என்னதான் நன்கொடைகளை வாரி வழங்கினாலும் அவரது சொத்து மதிப்பு 5 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது.

ஒரு படி முன்னேறிய முகேஷ் அம்பானி
ப்ளூம்பெர்க் பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக இடம்பெற்றுள்ளார் ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி. கடந்த முறை 21 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 19வது இடத்தில் இருந்த அவர் தற்போது 24.7 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 18வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.












Click it and Unblock the Notifications