பிரதமர் பதவி்க்கு முற்றிலும் பொருத்தமானவர் வைகோ- ராம்ஜேத்மலானி

ஈழத்தில் இனக்கொலை: இதயத்தில் இரத்தம் என்ற தலைப்பில் வைகோ தயாரித்த ஒளிப்படக் குறுவட்டு மற்றும் புத்தகம், இந்தி மற்றும் ஆங்கில மொழியில் தயாரிக்கப்பட்டு டெல்லியில் வெளியிடபட்டது. அது தற்போது மராத்தி மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் வெளியீட்டு விழா 5.1.2013 அன்று மும்பை செம்பூரில் உள்ள பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி அரங்கில் நடைபெற்றது.
மும்பை மாநகராட்சி மன்ற உறுப்பினரும், பணிக்குழு தலைவருமான கேப்டன் தமிழ்செல்வன் விழாவுக்கு தலைமை ஏற்றார். ஈரோடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, வரவேற்பு உரை ஆற்றினர்.
புத்தகம் மற்றும் ஒளிப்பட குறுவட்டை, மூத்த வழக்கறிஞரும் நாடாளுமன்ற ராஜ்யசபா உறுப்பினருமான ராம்ஜேத்மலானி வெளியிட, நவபாரத் இந்தி நாளேட்டின் ஆசிரியர் பிரஜ்மோகன் பண்டே, பிரகார் மராத்தி மொழி நாளேட்டின் ஆசிரியர் மகேஷ் மாத்ரே ஆகியோர் பெற்றுகொண்டனர்.
விழாவில், மதிமுக பொருளாளர் டாக்டர் மாசிலாமணி, துணை பொதுசெயலாளர்கள் மல்லை சத்யா, துரை பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ராம்ஜேத்மலானி பேசுகையில், ஈழதமிழர்களுக்காக வைகோ தொடர்ந்து போராடி வருகின்றார். அவர் ஒரு தனிமனித ராணுவம். இங்கே உணர்ச்சிகரமாக அவர் ஆங்கிலத்தில் ஆற்றிய உரையை கேட்டேன். அந்த அளவுக்கு உணர்ச்சிகரமாக என்னால் பேச முடியாது. யாராலும் பேச முடியாது.
தாம் எடுத்து கொண்ட கருத்தை ஆணித்தரமாக உறுதியாக எடுத்துரைப்பதில் வைகோவிற்கு நிகர் வைகோதான். 2011ம் ஆண்டு வைகோ என்னிடம் வந்தார். ஒரு பிரச்சினையில் உங்கள் உதவி நாடி வந்திருக்கிறேன் என்றார். என்ன பிரச்சனை? என்றேன். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளவர்களை பற்றி அவர் கூறினார். எனக்கு அது ஒரு பிரச்சினையாகவே தெரியவில்லை. ஏன் என்றால் அவர்கள் குற்றவாளிகளே அல்ல. அவர்கள் மீதான குற்ற பத்திரிக்கை நான் படித்த அளவில் இதை நான் அறிந்து கொண்டேன். எனவேதான் தடை ஆணை பெற முடிந்தது.
வைகோ மராத்தி மொழியில் தயாரித்து வெளியிட்டு இருக்கின்ற இந்த புத்தகம் இலங்கை தமிழர்கள் பட்ட இன்னல்களை அவர்கள் அனுபவித்த வேதனைகளை முழுமையாக எடுத்துரைகின்றது. இந்தியாவின் அணைத்து மாநில மக்களுக்கும் இந்த கருத்துக்கள் சென்று சேரவேண்டும் என்பதற்காக வைகோ இந்த முயற்ச்சிகளை மேற்கொண்டு உள்ளார்.
மராத்தி மொழியில் இதை வாசிக்கின்றவர்களுக்கு, இலங்கையில் நடந்த கொடூரங்களை முழுமையாக புரிந்து கொள்ள முடியும். ஈழதமிழர்களுக்காக வைகோ மேற்கொண்டுள்ள முயற்ச்சிகளை நான் பாராட்டுகின்றேன்.
நான் வைகோவை நேசிக்கிறேன். வைகோ உங்களை நேசிக்கிறார், அதனால் நானும் உங்களை நேசிக்கிறேன். தமிழர்களுடைய பண்பாடு, பழக்க வழக்கங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். வைகோவை நல்ல நண்பராக ஏற்று கொண்டு இருக்கின்றேன். அவர் மிகவும் திறமையானவர் இந்திய நாட்டின் பிரதமர் ஆக கூடிய தகுதி வாய்ந்தவர் வைகோ. அப்படி ஒரு வாய்ப்பு உருவாகுமானால், என்னுடைய ஓட்டு வைகோவுக்குத்தான் என்றார் ராம்ஜேத்மலானி.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications