காந்தியைக் கொன்றவர்கள் எங்களுக்கு நாட்டை நேசிக்கக் கற்றுத்தர தேவையில்லை: எம்.பி. ஒவைசி

ஆந்திர மாநிலம் ஆதிலாபாத் மாவட்டத்தில் உள்ள நிர்மல் நகரில் கடந்த மாதம் 24ம் தேதி நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மஜ்லிஸ் இ இத்திஹத்துல் முஸ்லிமீன் எம்.எல்.ஏ. அக்பருத்தீன் ஒவைசி மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரது சகோதரர் ஹைதராபாத் எம்.பி.யும், மஜ்லிஸ் இ இத்திஹத்துல் முஸ்லிமீன் கட்சி தலைவருமான அசாதுத்தீன் ஒவைசி ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள டண்டூரில் நடந்த கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது,
நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. எங்கள் எதிரிகள் காங்கிரஸும், பாஜகவும் தான். இது என் நாட்டு. என் நாட்டை நான் நேசிக்கிறேன். எனது தாய்நாட்டை நேசிப்பது எப்படி என்று காந்தியைக் கொன்றவர்கள், பாபர் மசூதியை இடித்தவர்கள், குஜராத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களைக் கொன்றவர்களிடம் இருந்து பாடம் கற்க வேண்டிய அவசியம் இல்லை. காங்கிரஸுக்கு நாங்கள் அளித்த ஆதரவை வாபஸ் பெற்றதால் ஆந்திர அரசு வேண்டும் என்றே எனது சகோதரர் மீது வழக்குகள் போடுகிறது.
ஆனால் இந்திய சட்டங்கள் மற்றும் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது. அக்பருத்தீன் சட்டத்தில் இருந்து ஓடிவிட மாட்டார். இந்து சமுதாயத்தை தூண்டிவிடும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் விஸ்வ இந்து பரிஷத் ஆகிய அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications