For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரை மாவட்டத்துக்குள் நுழைய டாக்டர் ராமதாஸுக்கு தடை! மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை!!

By Mathi
Google Oneindia Tamil News

Ramadoss
மதுரை: பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதற்காக மதுரை மாவட்டத்துக்குள் பிப்ரவரி 21-ந் தேதி வரை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நுழைய மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

மதுரையில் சாதி சங்கங்களை ஒருங்கிணைத்து காதல் திருமணங்களை எதிர்த்தும் தலித்துகளை விமர்சித்தும் சாதி மோதலை தூண்டும் வகையில் பேசியதால், மாவட்டத்துக்குள் நுழைய உங்களுக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது? என்று ராமதாஸுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்த நோட்டீஸுக்கு எதிர்ப்பு தெரிவித்த ராமதாஸ், வழக்கறிஞர்கள் மூலம் பதில் அளித்திருந்தார்.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்துக்குள் நுழைய ராமதாஸ் உள்ளிட்ட சாதித் தலைவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

தற்போது பிப்ரவரி 21-ந் தேதி வரை மதுரை மாவட்டத்துக்குள் நுழையவும் ராமதாஸுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் ராமதாஸுக்கு தடை விதிப்பது தொடர்பாக மற்றொரு நோட்டீஸையும் அனுப்பி வைத்திருக்கிறார் மதுரை ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா.

English summary
PMK founder S Ramadoss is facing heat for his alleged inflammatory speeches.Close on the heels of Ramanathapuram district invoking Section 144 to prevent the PMK leader,who has been vocal about his opposition to inter-caste marriages,from conducting a meeting in the communally-sensitive district,Madurai also follow suit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X